‘ஜூனியர் அருண்விஜய்’ என்று குறிப்பிட்டு தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ள அருண் விஜய்.

0
4968
arunvijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.  மேலும், இவர் பிரபல நட்சத்திர நடிகரான விஜயகுமாரின் மகன் என்பதும் இவரது சகோதரிகள் சிலர் கூட சினிமாவில் நடிகைகளாக திகழ்ந்து வந்தனர் என்பதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

-விளம்பரம்-

அருண் விஜய் எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது மலை மலை, தடையற தாக்க போன்ற படங்கள் தான். மேலும், அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : உன் படத்துல என்ன அது தெரியவா போதுனு எனக்கு கோபம் வந்துடிச்சி – சரண்யா பொன்வண்ணன் பேட்டி.

மேலும், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹா’ படத்தில் கூட நடித்திருந்தார். சமீபத்தில் இவர் மாபியா படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் விஜய் பாக்ஸர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் விஜய்க்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்களுக்கு பூர்வி என்ற மகளும் மற்றும் ஆர்னவ் விஜய் என்ற மகனும் பிறந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் இன்று (மார்ச் 6) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது அன்பு மகனுக்கு வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள அருண் விஜய்,குழந்தைகள், நாம் சொர்க்கத்தைப் பிடிக்கும் கைகள் என்று குறிப்பிட்டு #HWB #Arnavvijay #AVjunior என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் ஜூனியர் அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement