தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெட்ட தல. இந்த படத்தில் சித்தி இதானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான்விஜய், பாலாஜி முருகதாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை க்ரிஷ் திருக்குமரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் அருண் விஜய்-சித்தி இருவருமே அப்பா, அம்மா யாருமில்லாமல் பாண்டிச்சேரியில் அனாதையாக வளர்கிறார்கள். பல வருடம் கழித்து வந்த அருண் விஜய், சித்தியை திருமணம் செய்து கொள்ள வருகிறார். ஆனால், சித்தி மாடலாக வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு ஓட்டலில் வெயிட்டராக இருக்கிறார். சித்திக்கு கோடீஸ்வரி ஆக வாழ வேண்டும் என்பதுதான் ஆசை.
அந்த நேரத்தில் அருண் விஜய் தன்னை போலவே இருக்கும் கோடீஸ்வரன் அருண் விஜய் ஒருவரை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இதை அறிந்த சித்தி, அந்த பணக்காரன் அருண் விஜயை கொன்றுவிடு. அவனுடைய இடத்துக்கு நீ போ. அவன் பணத்தை நாம் அனுபவிக்கலாம் என்றெல்லாம் ஐடியா கொடுக்கிறார். பின் ஏழ்மையில் இருக்கும் அருண் விஜய் தன்னுடைய காதலி சொன்னதால் பணக்காரன் அருண் விஜயை கொல்கிறார்.

அதற்கு பிறகு இறந்த அருண் விஜய் தான் பரோலில் வெளி வருகிறார். அவரும் ஒரு பெரிய ஹிட்மேன். அதற்குப் பிறகு என்ன ஆனது? ஏழை அருண் விஜய் என்ன ஆனார்? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் செம மாசாக பட்டையை கிளப்பி இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் எல்லாம் தூள் கிளப்பு இருக்கிறார். ஒரு பக்கம் ஹிட்மேன், இன்னொரு பக்கம் காதலிக்காக வாழும் அருண் விஜய் என்று இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டி இருக்கிறார்.
இருந்தாலும் லுக்கில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்றாலும் ஆட்டிட்யூட்டில் தூள் கிளப்பு இருக்கிறார். கதாநாயகி சித்தி, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் பொறுமையாக நகர்கிறது. இரண்டு அருண் விஜய்யும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளுக்கு பிறகு தான் ஆட்டமே சூடு பிடிக்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இருந்தாலும் சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம். படம் முழுக்க சண்டை காட்சிகளாக தான் இருக்கிறது.

ட்விஸ்ட்டுகள் படத்தில் நிறைய இருந்தாலும் அதை இன்னும் கொஞ்சம் இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசி 30 நிமிடம் படத்தை ரசிக்கும் படியாக இருக்கிறது. கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. வழக்கம்போல மாபியா கேங், டான், கோட் சூட் என்று அரைத்த மாவை தான் இந்த படத்திலும் இயக்குனர் அரைத்து வைத்திருக்கிறார். டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
அருண் விஜய் நடிப்பு நன்றாக இருக்கிறது
சண்டை காட்சி, பின்னணி இசை சூப்பர்
கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது
இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
ஏகப்பட்ட லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
வில்லன் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்
மொத்தத்தில் ரெட்டை தல - தடம் பதிக்க தடுமாற்றம்






