அருண் விஜய்யின் குடும்பத்தில் இருக்கும் இந்த பொண்ணு யாரு தெரியுமா ? பாத்த ஷாக்காகிடுவீங்க.

0
1595
arunvijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் நீண்ட வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. நடிகர் அருண் விஜய் பிரபல நட்சத்திர தம்பதிகளாக விஜயகுமாரின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. ருண் விஜய்க்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்களுக்கு பூர்வி என்ற மகளும் மற்றும் இவர்களுக்கு விஜய் என்ற மகனும் பிறந்தனர்.

-விளம்பரம்-

மேலும், அருண் விஜய் விஜயகுமாரின் முதல் மனைவி மகன் தான். நடிகர் விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.

- Advertisement -

அருண் விஜய்யின் சொந்த சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்.

தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா. அருண் விஜய் குடும்பத்தில் இவங்க ஒருத்தர் மட்டும் தான் சினிமா துறையில் இல்லாத ஒரே ஆள். இப்படி ஒரு நிலையில் அனிதாவின் மகள் தியா, தனது தாய் மாமாவான அருண் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவருடன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement