சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ குள்ளமான காமெடி நடிகர்கள் இருந்திருக்கின்றனர். தற்போதும் ஒரு சில குள்ள காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் நடித்த இவரை 90ஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாடீர்கள். 1997ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, மனோரமா, வடிவுக்கரசி, செந்தில், ரகுவரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது.

ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற டயலாக்கின் மூலம் இளைஞர்களை தன் பக்கம் கட்டி போட்டார் ரஜினி.மேலும், இந்த படம் திரையரங்கில் 175 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்திருந்தது. இந்த படம் உலக அளவில் 32.71 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதிலும் இந்தியாவில் 25.55 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் மூன்றே காட்சிகளில் வந்தாலும் மறக்க முடியாத ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் பதிந்தார் சுப்புணி.

Advertisement

இவரது உண்மையான பெயர் சுப்பிரமணி ஆனால், செல்லமாக சுப்புணி என்று தான் அழைப்பார்கள் 1976-வெளிவந்த கே.பாலசந்தரின் “மன்மத லீலை” படத்தில் “மனசாட்சி”யாக நடித்திருந்தவர்தான் இந்த குள்ள நடிகர் சுப்புணி. ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட “ஸ்பரிசம்” படத்தில் ராக்கெட் ராமனாதனுடன் இணைந்து  நகைச்சுவை விருந்து படைத்துள்ளார்.

1983-ஆம் ஆண்டு எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற “உருவங்கள் மாறலாம்” என்ற படத்தில் இவர் வங்கி அதிகாரியாக நகைச்சுவைக்  கதாபாத்திரமேற்றிருந்தார். முக்தா பிலிம்ஸ், முக்தா வி.சுந்தர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற 1982-ஆம் ஆண்டு “கோடை மழை” போன்ற பல படங்களில் இவர் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னாரே அருணாச்சலம் படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

ஆனால், அருணாச்சலம் படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பேசிய அவர் எனக்கு 72 வயதாகிறது. பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். 4ஆம் வகுப்பு படிக்கும் போது வீர பாண்டியன் கட்டபொம்மன் நாடகத்தில் நடித்தேன். அதன் பின்னர் பல நாடகங்களில் நடித்தேன்.

Advertisement

அப்படியே ஒய்.ஜி. மகேந்திரன் நாடக குரூபில் சேர்ந்தேன். என்னை ஒரு நடிகராக ஆகியது ஒய்.ஜி. மகேந்திரன் தான். அதன் பின்னர் தான் சினிமாவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை அறிமுகம் செய்தது கே பாலச்சந்திரர் சார் தான். எனக்கு ட்ராமா தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. சினிமாவில் சம்பாதித்த காசு எனக்கு ஓட்டல. மேலும், அருணாச்சலம் படத்திற்கு பின்னர் எனக்கு படம் அமையவில்லை. அதனால நான் வ்ருத்தப்படவும் இல்லை’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement