அருந்ததி படத்தில் நடித்த குட்டி அனுஷ்கா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
4645

2009ல் அனுஸ்கா நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் பேய் படம்தான் அருந்ததி. இந்த படத்தில் சின்ன வயது அனுஷ்காவாக ஒரு பெண் நடித்திருப்பார். அவருடைய பெயர் தெரியுமா? அவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

arundhati

அவருடைய பெயர் திவ்யா நாகேஷ்., 1988ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். பின்னர் தனது படிப்பிற்காக சிறு வயதிலேயே சென்னை வந்து செட்டில் ஆனது திவ்யாவின் குடும்பம். சென்னை வந்து செயின்ட் ஜோசப் பள்ளியிலும், திருச்சி ஹோலி க்ராஸ் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார் திவ்யா.

actress-divya-nagesh

dhivya-nagesh

சென்னையில் படிக்கும் போது தன் அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார். அப்போது திவ்யாவிற்கு காய்ச்சல் என மைதானத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அங்கு ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் ஒரு தெலுங்கு சீரியலை சூட்டிங் செய்து வந்துள்ளனர். காய்ச்சல் என்று உட்கார்ந்திருந்த திவ்யா அந்த சூட்டிங்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதனை பார்த்த அந்த சீரியலின் இயக்குனர் திவ்யாவை நடிக்க கூப்பிட்டுள்ளார். இதற்கு திவ்யாவின் அப்பா ஓக்கே சொல்ல அதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பல விளம்பர படத்தில் நடித்தார் திவ்யா. அந்நியன் படத்தில் சின்ன வயது விக்ரமுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

divya

divya-nagesh

divya-nagesh-actress

அதன் பின்னர், அது ஒரு கனா காலம், ஜில்லுன்னு ஒரு காதல், பொய் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 2009ல் அருந்ததி படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவின் நந்தி அவார்டை வாங்கினார். கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் திவ்யா. அதன் பின்னர் மதிகெட்டன் சாலை, பாசக்கார நண்பர்கள் என தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

தற்போது தேடினேன் என்ற தமிழ் படத்திலும், வஸ்தவம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் திவ்யா நாகேஷ்.