சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள். ஷாலினி தொடங்கி தெய்வதிருமகள் சாரா வரை நாம் திரையில் பார்த்த குழந்தை நட்சத்திரங்களா இது என்ற அளவிலும் மாறியதை நாம் கண்டிருக்கிறோம். அந்த வகையில் அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தில் நடித்த குழந்தையை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் திகில் படங்கள் அதிகம் வந்த காலகட்டத்தில் வந்த படம்தான் அருந்ததி.
அனுஸ்காவின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி உருவாகி, தமிழி, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் இந்தப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. இந்த படத்தில் அனுஷ்காவிற்கு இணையாக சிறுவயது அனுஷ்காவாக நடித்த அவருடைய பெயர் திவ்யா நாகேஷ்., 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். பின்னர் தனது படிப்பிற்காக சிறு வயதிலேயே சென்னை வந்து செட்டில் ஆனது திவ்யாவின் குடும்பம்.
சென்னை வந்து செயின்ட் ஜோசப் பள்ளியிலும், திருச்சி ஹோலி க்ராஸ் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார் திவ்யா. சென்னையில் படிக்கும் போது தன் அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார். அப்போது திவ்யாவிற்கு காய்ச்சல் என மைதானத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அங்கு ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் ஒரு தெலுங்கு சீரியலை சூட்டிங் செய்து வந்துள்ளனர். காய்ச்சல் என்று உட்கார்ந்திருந்த திவ்யா அந்த சூட்டிங்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த சீரியலின் இயக்குனர் திவ்யாவை நடிக்க கூப்பிட்டுள்ளார். அதன் பின்னர் திவ்யாவின் பெற்றோர்களையும் அணுகி, திவ்யாவை நடிக்க வைக்க சம்மதம் கேட்டுள்ளார் இதற்கு திவ்யாவின் அப்பா ஓக்கே சொல்லஅந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் திவ்யா. அதன் பின்னர் பல்வேறு தெலுங்கு மற்றும் தமிழ் விளம்பர படத்தில் நடித்தார் திவ்யா. அந்நியன் படத்தில் சின்ன வயது விக்ரமுக்கு தங்கையாக நடித்திருப்பார். அந்த படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் பின்னர், தமிழில் அது ஒரு கனா காலம், ஜில்லுன்னு ஒரு காதல், பொய் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
2009 ஆம் ஆண்டு அருந்ததி படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதினையும் வாங்கினார். இதுவரை கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் திவ்யா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த திவ்யா அதன் பின்னர் மதிகெட்டன் சாலை, பாசக்கார நண்பர்கள் என தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வளம் வர முடியவில்லை. இறுதியாக தேடினேன் என்ற தமிழ் படத்திலும், வஸ்தவம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார் திவ்யா நாகேஷ். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர போராடி வருகிறார். விரைவில் இவரை தமிழ் அல்லது தெலுங்கு சினிமாவில் பாப்போம் என்று நம்புவோம்.