கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்த மனைவி, இந்தாண்டு இரண்டாம் திருமணத்தை முடித்த அருண்ராஜா காமராஜ்.

0
889
Arunraja
- Advertisement -

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்பவர் அருண் ராஜா காமராஜ். இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதிலும் தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி இருந்த கனா படம் மூலம் அருண் ராஜா காமராஜ் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். 2018ஆம் ஆண்டு கனா படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அருண் ராஜா காமராஜ் திரைப்பயணம்:

தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் சீன மொழியிலும் இப்படம் வெளியாகி இருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா காலமானார். மனைவி இறந்ததால் சில காலம் அருண்ராஜா சோகத்தில் இருந்தார்.

Arunraja

நெஞ்சுக்கு நீதி படம்:

கனா படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த ‘ஆர்டிகள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து இருந்தார் அருண்ராஜா. அந்த உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை ஜீ5 ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அருண்ராஜா திருமணம்:

இந்த படம் பல சமூக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனையடுத்து அருண் ராஜா இயக்கும் படம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பு:

அதாவது, அருண் ராஜா அவர்கள் கடந்த 28ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவர் திருமணம் செய்து கொண்ட நபர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement