முகக்கவசம் அணியாமல் வந்ததால் அபராதம் – வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அருவி பட நடிகை. வீடியோ இதோ.

0
456
aditi

இந்தியாவில் கடந்த 8 மாதமாக கொரோனா வைரஸ் தாக்கம் தலைவிரித்து ஆடி வருகிறது. கொரோனா பரவலின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும், இந்தியா முழுதும் பல மாதம் ஊரடங்கும் கடிபிடிக்கப்ட்டு வந்தது. இருப்பினும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக படிப்படியாக ஒரு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது அரசாங்கம். அந்த வகையில் கொரோனா பிரச்சனையால் பல மாத காலமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

Aditi Balan clarifies she's not a part of Santosh Sivan's 'Jack n Jill' |  The News Minute

தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அப்படி மாஸ்க் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் மாஸ்க் அணியாமல் சென்ற அருவி பட நடிகை அதிதி பாலனுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி பாலன் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்றார்.அந்த படத்திற்கு முன்னாள் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி பாலன். கடந்த சில காலமாக இவரை எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா சென்றுள்ளார்.

அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த இவருக்கு அபராதம் விதிக்க கேட்டுள்ளனர். ஆனால், சுகாதார துறை அதிகாரிகளிடம் மாஸ்க் அணிய முடியாது என்றும் அபராததும் கட்ட முடியாது என்றும் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவருக்கு

-விளம்பரம்-
Advertisement