இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்..!அருவி திரைப்பட நடிகை..!

0
408
Anjalivarathan

`அருவி’ படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர், திருநங்கை அஞ்சலி வரதன். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். `அருவி’ படத்துக்குப் பிறகு அஞ்சலி வரதன் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

Anjalaivarathan

சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகை அஞ்சலி “அருவி படத்துக்கு அப்புறம் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, மறுபடி அருவி மாதிரியான படம் அமையவில்லை. சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நின்னுட்டுப் போகுறதுல எனக்கும் உடன்பாடு இல்லை.

அதுமட்டுமல்லாமல், என்னுடைய மாணவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுப்பதற்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. அதுல முழு திருப்தியும் கிடைக்குது. அதனால்தான் இனிமே படங்களில் நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கேன். முன்னாடி திருநங்கைன்னு சொன்னா பலரும் ஒதுக்குவாங்க; முகம் சுளிப்பாங்க. இப்போ என்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்ட பசங்க எல்லோரும் என்னை அன்பா ஆன்ட்டின்னுதான் கூப்பிடுறாங்க.

அவங்க என்னைப் பார்க்கும்போது புதுசா யாரையோ பார்க்கிற மாதிரியான பார்வை இல்லை. இயல்பா புன்சிரிப்போடு, என்கிட்ட பழகுறாங்க. நடனம் கத்துக்கிறதையும் தாண்டி செல்லமா விளையாடுவாங்க. அந்தக் குழந்தைங்களுடைய உலகில் மகிழ்ச்சியாய் வாழறேன். காசு, பணம் ரொம்பத் தேவையில்லை. எளிமையான வாழ்க்கை வாழவே ஆசைப்படுறேன்” என கூறியுள்ளார்.