44 வயதில் திருமணம் முடித்த படையப்பா,வில்லன் பட நடிகை – மாப்பிள்ளை யார் தெரியுமா ? இதோ திருமண புகைப்படம்.

0
559
lavanya
- Advertisement -

44 வயதில் விஜய்-அஜித் பட நடிகை திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லாவண்யா தேவி. இவர் 1979 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சூரிய வம்சம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். குறிப்பாக, ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படையப்பா படத்தின் மூலம் லாவண்யா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

லாவண்யா தேவி குறித்த தகவல்:

இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், மாதவன் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப் பின் லாவண்யாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்.

அருவி சீரியல்:

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று அருவி. இந்த தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் லாவண்யா தேவி நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை லாவண்யா தேவிக்கு திருமணம் ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

லாவண்யா தேவி திருமணம்:

அதாவது, தற்போது நடிகை லாவண்யாவிற்கு 44 வயதாகி இருக்கிறது. இவர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் நடைபெற்றிருக்கிறது. மேலும், இவர்களுடைய திருமணத்தில் சீரியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் லாவண்யா- பிரசன்னா உடைய திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement