அச்சு அசலாக எம் ஜி ஆர் போலவே மாறியுள்ள அரவிந்த்சாமி. தலைவி படத்தின் புதிய டீஸர்.

0
2460
mgr
- Advertisement -

கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அந்த படத்திற்கான பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவ்த் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்ததாம் தூம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் மோதல் ஏற்பட்டபோது எம் ஜி ஆரை எம், ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : நீங்க சொன்னது கரக்ட் தான்னு விஜயே சொன்னாரு. பவன் கொடுத்த அடுத்த ஷாக். வைரலாகும் வீடியோ.

தற்போது அந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்களாம். மேலும், இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியை கூட கற்று வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் தோன்றிய கங்கனா ரனாவத், ஜெயலலிதாவை போலநடிக்க மிகவும் மெனக்கெட்டுள்ளார் என்பது அந்த டீசரை பார்த்த போதே தெரிந்தது. மேலும், இந்த படத்திற்காக கங்கனா ரணாவத் உடல் எடை கூட்டி இருக்கிறார் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தில் எம் ஜி ஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சற்று உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. மேலும், இந்த படத்திற்காக கிளீன் ஷேவ் செய்து கொழுக் முழுக் தோற்றத்தில் மாறியுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. சமீபத்தில் அரவிந்த் சாமியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த படத்தில் நடித்துள்ள அரவிந்த் சாமியின் டீசர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அச்சு அசலாக எம் ஜி ஆர் போலவே மாறி நான் ஆணையிட்டால் பாடலுக்கு எம் ஜி ஆர் போலவே நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியள்ளார் அரவிந்த் சாமி.

Advertisement