அரவிந்சாமிக்கு தோலுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கிறாரா..! வெளிவந்த புகைப்படம்

0
384
Aravindswamy
- Advertisement -

நடிகர் அரவிந்த்சாமி எப்படிபட்ட நடிகர் என்பது நமக்கு தெரியும்.1991 இல் சூப்பர் ஸ்டாரின் “தளபதி” படத்தில் நடித்த அரவிந்த் சாமி அதன் பின்னர் சாக்லேட் பாய் என்று அனைத்து பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இன்றும் ஒரு சில ஹீரோக்களுக்கு சவால் இடும் வகையில் படங்களில் நடித்து வருகிறார்.

Arvind Swamy

தற்போது 48 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். தற்போது இந்த ஆண்டில் தமிழில் 4 படங்களில் நடித்துள்ள அரவிந்த் சாமி தற்போது நரகசூரன்,செக்க செவந்த வானம் என்ற படங்களில் நடித்து வருகிறார்.
.
அரவிந்த்சாமிக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் அதில் முதல் மனைவியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளான ஆதிரா மற்றும் ருத்திரா அகியோர்களை தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார்.

- Advertisement -

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஓய்வான நேரத்தை தனது பிள்ளைகளுடன் செலவழித்து வருகிறார் அரவிந்தசாமி. சமீபத்தில் அவரது மகன் ஆதிரா International Baccalaureate எனப்படும் டிப்ளமோ படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இந்த தகவளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அரவிந்த்சாமி தனது மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், தனது மகன் பட்டம் பெற்றதை எண்ணி தான் மிகவும் பெருமை அடைவதாக கூறியுள்ளார்..

Advertisement