சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் இவர் தொலைக்காட்சி நடிகர் டெல்லி கணேசன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அரவிந்த்சாமி தன் மாமாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான்.

இந்த படம் நாடெங்கிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பின் இவர் 2000 ஆண்டு முதல் நடிப்பை விட்டு தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் நடுவில் அரவிந்த்சாமி சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார்.
அரவிந்த்சாமி குறித்த தகவல்:
அதற்குப் பிறகு கடல் என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் செக்க சிவந்த வானம், தனி ஒருவன்,போகன் போன்ற பல படங்களில் நடித்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

அரவிந்த்சாமி பேட்டி:
இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதிதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மௌன படமாக வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அரவிந்த்சாமி, இடையில் எனக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதனால் தான் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். 2005 ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் ரொம்ப அதிகமான வலியுடன் படுத்த படுக்கையில் இருந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நான் முடிவெடுத்தேன்.

சினிமாவில் நடிக்காத காரணம்:
அதனால் தான் அவ்வளவு நாட்கள் நான் வழியில் இருந்தேன். பின் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தேன். என்னை சுற்றி எப்போதும் அலோபதி மருத்துவ நம்பிக்கைகள் இருந்ததால் ஆயுர்வேதத்தை ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பின் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே நான் நடக்க தொடங்கி விட்டேன். எனக்கு இது வேலை செய்தது. ஆனால், இது எல்லோரும் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவம் தான். உங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையை பின்பற்றுங்கள். ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் ஞானம் இருக்கிறது. அது எனக்கு பலமுறை உதவுகிறது என்று கூறி இருக்கிறார்.






