இரண்டு போராட்டம் ! எது வேணும்..? அதுவா..இதுவா.? நீங்களே முடிவு பண்ணுங்க ! அரவிந்தசாமி அதிரடி

0
457
Actor Aravindswamy

தமிழ் நாட்டில் தற்போது நீண்ட நாட்களாக விவசாயிகளுக் கு ஆதரவாக காவேரி வாரியம் அமைக்க கோறி பல்வேறு தரப்பினரும் பொது நலத்துடன் போராடி வருகின்றனர்.மேலும் சில நாட்ககளுக்கு முன்னர் கூட காவேரி மேலாண்மை அமைக்கும் வரை தமிழகத்தில் ipl போட்டிகளை கூட நடத்த விட மாட்டோம் என்று போராட்டங்கள் நடந்ததால் இனி வரும் சென்னை ipl போட்டிகள் அனைத்தும் புனே விற்கு மாற்ற பட்டது.

இதையெல்லாம் தாண்டி நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா சார்பில் பலவேறு பிரபலங்களுக்கு இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும் சிம்பு கிட்டதட்ட காவேரி நீரை தமிழகத்திற் க்கு தர கன்னட மக்களுக்கு எந்த பிரேச்சனையும் இல்லை என்பதை ஒரு டம்ப்ளேர் தண்ணீர் மூலம் ஓரளவுக்கு நிரூபித்து விட்டார்.இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராடி வந்த இரு பிரிவினர் பற்றியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் அரவிந்த் சாமி.

இதுபற்றி அவர் தெரிவித்த போது கடந்த இரண்டு நாட்களாக 2 விதமான போராட்டங்கள் நடந்து வருகிறது.ஒன்றில் எதிர்மறையானா பப்லிசிடியும் ,சொந்த மக்களையே அடிக்கும் போராட்டமாக அமைந்தது.மற்றொரு போராடமோ உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.அது தான் நமக்கு தேவை,இப்போது நீங்கள் முடிவெடுங்கள் எது எதிர்காலத்துக்கான சிறந்த போராட்டம் என்று. என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.