ரெக்கார்ட் பிரேக்கிங் விலைக்கு ‘சார்பட்டா’ படத்தை வாங்கிய OTT நிறுவனம் – காரணம் இது தான்.

0
888
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தாக்கம் குறைந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் எல்லாம் நேரடியாக OTT யில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் OTTயில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அதே போல பல மாதங்களாக திரையரங்க ரிலீசுக்கு காத்திருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கூட தற்போது OTT யில் விற்கப்பட்டுவிட்டது. இப்படி ஒரு நிலையில் ப ரஞ்சித் இயக்கத்தில் ஆரியா நடித்து வந்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படமும் Ott ரிலீசுக்கு தயாராகி விட்டது. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், சஞ்சனா நடராஜன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இதையும் பாருங்க : நடிகை நீலிமா பெயரில் இணையத்தில் உலா வரும் ஆபாச வீடியோ – ரசிகர்கள் ஷாக்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் அணைத்து பணிகளும் எப்போதோ நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த திரைப்படத்தை OTT வெளியிட படக்குழு முடிவெடுத்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் ஆர்யாவின் நடிப்பு படத்துக்கு பெரும்பலம் சேர்த்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தை வாங்க பல OTT நிறுவனமும் போட்டி போட்டுள்ளது. இறுதியில் இந்த படத்தை பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறது Amazon நிறுவனம். அதே போல இறுதியாக ஆர்யா நடிப்பில் OTTயில் வெளியான ‘டெடி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதும் இந்த படத்தை OTT நிறுவனம் வாங்க முன்வந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement