மகள் பிறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் மகளின் பெயரை அறிவித்த ஆர்யா. (புனிதமான பெயர்)

0
6655
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது.

இதையும் பாருங்க : ‘இந்த ஆம்பள உடம்புக்கு சொந்தக்காரி டாப்ஸியாதான் இருக்கும்’ கேலி செய்தவருக்கு டாப்ஸி கொடுத்த நச் பதில்.

- Advertisement -

ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா. இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், கர்ப்பமாக இருப்பதை படு ரகசியமாக காத்து வந்து குழந்தை பிறந்த பின்னரே அறிவித்தனர் ஆர்யா – சயீஷா தம்பதி. இப்படி ஒரு நிலையில் மகள் பிறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தன் மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்கள். தங்கள் மகளுக்கு ஆரியானா என்று பெயர் வைத்துள்ளனர். அப்படி என்றால் மிகவும் புனிதமான என்று அர்த்தமாம்.

-விளம்பரம்-
Advertisement