பத்து தல படத்தில் நடனமாடி இருக்கும் தன்னுடைய மனைவி பற்றி ஆர்யா ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இப்படத்திற்கு பிறகு கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்திருந்தார் இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனை விஜய் சேதுபதி நடித்த “ஜூங்கா” படத்தில் நடித்தார். இந்நிலையில் மீண்டும் நடிகர் ஆரிவுடன் இணைந்த சாய்ஷா கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார்.
கஜினிகாந்த் தெலுங்குப் படமான பலே பலே மகடிவோயின் ரீமேக்காகும். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக குச்சிப்புடி நடனக் கலைஞராக நடித்திருந்தார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா.
குடும்பம் :
இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், கர்ப்பமாக இருப்பதை படு ரகசியமாக காத்து வந்து குழந்தை பிறந்த பின்னரே அறிவித்தனர் ஆர்யா – சயீஷா தம்பதி. அதற்கு பிறகு சமீபத்தில் தான் தங்களுடைய மகளுக்கு ஆரியானா என்று பெயர் வைத்தனர்.
பத்து தல :
இந்நிலையில் ஆர்யாவின் மனைவி சாய்ஷா கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான “யுவரத்னா” என்ற கன்னட படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த சாய்ஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிம்பு நடித்துள்ள “பத்து தல” படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளார். பத்து தல படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர், அனு சித்ரா என ஓர் நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
ராவடி பாடல் :
இப்படியொரு நிலையில் “பத்து தல” படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இப்படமானது வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் “பத்து தல” படத்தில் வரும் “அடாவடி” பாடலில் நடிகை சாய்ஷா கவர்ச்சியான நடனம் ஆடியிருக்கிறார். ஆனால் 2 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் சமயத்தில் இது தேவையா என நெட்சன்கள் விமர்சித்து வந்தனர்.
Can’t wait to see you on big screen 🔥🔥🔥😍😍😍you are the best love 😘😘🤗This is just the beginning 😉👍 https://t.co/tDZt94y8kE
— Arya (@arya_offl) March 25, 2023
ஆர்யா ட்விட் பதிவு :
இந்த நிலையில் நடிகை சாயிஷா ஆடியுள்ள ஐட்டம் நம்பருக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் அவருடைய கணவர் ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்த பதிவில் பெரிய திரையில் நான் உன்னை காண்பதற்கு ஆவலாக காத்திருக்கிறேன். நீ என்றும் சிறந்தவள். இது ஒரு தொடஙக்கம் தான் என்று சாயிஷாவை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் வரும் 30 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் விடுதலை பாகம் 1 படமும் பத்து தலையுடன் வெளியாவதினால் படத்திற்கான எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.