நடிக்க பட வாய்ப்புகள் இல்லாமல், தொழிலை மாற்றிய ஆர்யா பட நடிகை – புகைப்படம் உள்ளே !

0
1120
aarya

சினிமாவில் நடிகர்,நடிகர்கள் இயக்குனர் ஆவது என்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. பல படங்களில் நடித்து அதிலிருந்து பெற்ற அனுபவத்தை வைத்து தான் பின்னர் இயக்குநர்களாக மாறுகின்றனர். அதுவும் சினிமாவில் பெண் நடிகைகள் இயக்குனராக மாறிய கதைகள் மிகவும் குறைவு தான். அந்த வரிசையில் சினிமாவில் 10 பங்களில் கூட நடிக்காத ஒரு நடிகை தற்போது இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார்.

akshaya3

2006 இல் ஆர்யா நடித்த “கலாப காதலன்” படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அக்ஷ்ய ராவ். கலாப காதலன் படத்திற்கு முன்பாகவே படத்திற்கு முன்பாகவே தமிழில் “கோவில்பட்டி வீரலட்சுமி”,பார்த்திபன் கனவு ” போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதன் பின்னரும் ஒரு சில படங்களில் கதாநாயகியை நடித்திருந்தார் .ஆனால் இவரால் ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வர முடியவில்லை.

2016 வரை படங்களில் நடித்து வந்த இவர் இதுவரை 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது படவாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லாததால் தற்போது இயக்குனர் அவதாரத்தை எடுத்துவிட்டார். தற்போது இவர் யாரும் தனக்கு கதாநாயகி வாய்ப்பை கொடுக்காததால் “யாளி” என்ற படத்தை இயக்கி தானே அதில் கதாநாயகியுமாக நடித்து வருகிறார்.

Akshaya

ரொமான்டிக் திரில்லர் படமான இந்த படம் மும்பையில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த படத்தில் புதுமுக நடிகர் ஒருவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.