ஆர் ஜே வாக தனது பயணத்தை துவங்கி பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி சமீபாத்தில் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம்.
வீட்ல விசேஷம்
இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். இந்த படம் கடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் தாயாக நடித்தவர் தான் நடிகை ஊர்வசி.
ஆர்யா பார்வதி :
இவர் வீட்ல விசேஷம் படத்தில் கர்ப்பம் அடைந்து குழந்தை பெறுவதாக திரைக்கதை வரும். அதோடு சுவாரசியமான திரைக்கதையாகவும் இருக்கும். இந்த நிலையில் தான் இந்த படத்தில் வருவது போல நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருக்கு தற்போது 23வயது ஆகிறது. இந்த நிலையில் தான் 47 வயதாகும் இவரின் தாயாருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
முன்னதாக சமீபத்தி இவருடைய தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ஆர்யா பாரதி தான் விரைவில் சகோதரி ஆக போகிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதனுடன் வாசகத்தையும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது ஆர்யா பார்வதியின் தாய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவருடைய தாய் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் மகள் என்ன நினைப்பாள் என்று மக்களிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் ஆர்யா பார்வதி படப்பிடிப்பு மற்றும் வேறு விஷியங்களில் பிசியாக இருந்ததினால் வெளியில் தங்கி வந்திருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வந்த ஆர்யா தன்னுடைய தாய் கர்ப்பமாக இருப்பததை கண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருக்கிறார். மேலும் அவர் சகோதரி ஆகப்போகிறார் என்பதையும், தான் ஒரு தாய் ஸ்தானத்திற்கு மாறப்போவதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில் இவரின் தாய்க்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது பற்றி ஆர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு குழந்தை நலமாக இருப்பதை தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் யல் லைஃப் வீட்ல விசேஷம் என்று பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் வீட்ல விசேஷம் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான பதை ஹோ படத்தை கமன்ட் செய்து வருகின்றனர்.