திருமணம் ஆன சில நாட்களில் இப்படி ஒரு பிரச்சனையா ? பிரிகிறார்களா ஆர்யன் – ஷபானா ஜோடி. என்ன பிரச்சனை ?

0
873
sembaruthi
- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த ஷபானாவின் திருமணத்தில் அதற்குள் பிரச்சனை வெடித்து இருக்கிறது. வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். மேலும், இந்த சீரியலில் நாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆர்யன் – ஷபானா காதல் :

இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ், மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் செம்பருத்தி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் போட்டோஷூட் எடுப்பது, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வருவது போன்றவற்றை செய்து வருகிறார்.

- Advertisement -

திடீர் திருமணம் :

மேலும், இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதனிடையே ஷபானா– ஆர்யன் இருவரும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்வதற்கு முன்பு சபானா தன்னுடைய திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார்.

அதோடு இவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் திருமணம் செய்தது குறித்து ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்பட்டது. அது என்னவென்றால், ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதம் சேர்ந்தவர் என்பதால் இவர்களது திருமணம் இந்துமத முறைப்படி நடந்தது.

-விளம்பரம்-

பெற்றோர்கள் எதிர்ப்பு :

இதனால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர்கள் அவசர அவசரமாகத் திருமணம் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் திருமணத்தில் ஷபானா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் ஆர்யன் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதாம். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ஆர்யன் வீட்டிற்கு இன்னும் மணமகள் செல்லவில்லையாம்.

ஷபானாவிற்கு மிரட்டல் :

இதுக்கிடையில் தேனிலவுக்காக புதுச்சேரிப் பக்கமுள்ள ஒரு ரிசார்ட்டுக்கு 4 நாட்கள் சென்ற இவர்கள் அடுத்த நாளே கிளம்பி வந்துவிட்டார்களாம். இவர்கள் இருவர்குள்ளும் மனக் கசப்பு அதிமாகி கொண்டு செல்வதாக நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே ‘நீயா விலகிடு, நாங்க அவனுக்கு (ஆர்யனுக்கு) வேற ஒரு பொண்ணைப் பார்த்திருக்கோம்’ என்கிற ரீதியிலும் ஷபானாகிட்டப் பேசினதாச் சொல்றாங்க‌” என்கிறார்கள்

இதற்கெல்லாம் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம எல்லோருமே சில வலிகளை அனுபவிச்சுதான் வந்திருப்போம். பலருக்கு பலவிதமான பிரச்னை இருக்கு. சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாபனாவின் இந்த பதிவிற்கு என்ன காரணம் என்று குழம்பிபோய்யுள்ளனர்.

Advertisement