சிவகார்த்திகேயனுக்கு பரிசு கொடுத்தாங்க, எனக்கு சாக்லேட் தான் கொடுத்தாங்க – அசத்தப்போவது யார் வெங்கடேஷ் வேதனை.

0
805
venkatesh
- Advertisement -

விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், வெள்ளி திரைக்கு பல நபர்கள் விஜய் டிவியின் மூலம் தான் சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியும் ஒன்று. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை துவங்கி ஹிட் கொடுத்தது சன் டிவி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் வெங்கடேஷ். இவர் ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர். அதற்குப் பிறகு இவர் சினிமாவிலும் பல படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பின் வாய்ப்பு குறைந்த உடன் இவரை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பார்க்க முடியவில்லை. தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சமீபத்தில் பிரபல சேனல் ஒன்று வெங்கடேஷை பேட்டி எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருந்தது, என்னை தொலைக்காட்சி மூலமாகத்தான் எல்லோருக்குமே தெரியும். நான் காமெடி பாய்ஸ் என்ற பெயரில் ஸ்டேஜ் காமெடி செய்து கொண்டிருந்தோம். அந்த குழுவில் நானும் இருந்தேன். அதன் மூலமாகத்தான் ஸ்டாண்ட் அப் காமெடியன் பயணத்தை ஆரம்பித்தேன்.

- Advertisement -

கலக்கப்போவது யாரு சீசன் 2 வின்னர்:

எனக்குத் தெரிந்து ஐ பேடு பயன்படுத்தின முதல் தலைவர் என்றால் அது கருணாநிதி ஐயா தான். அந்த வகையில 70 ஸ் கிட்ஸ் ரொம்பவே லக்கி என்று தான் சொல்லணும். நாங்கள் எல்லா டெக்னாலஜியும் பார்த்து இருக்கிறோம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் என்னுடைய சின்னத்திரை பயணம் ஆரம்பித்தது. கலக்கப்போவது யாரு சீசன் 2வில் டைட்டில் வின் பண்ணினேன். அதற்கு சாக்லேட் பேக் தான் பரிசாக கிடைத்தது. ஒருவரை மக்கள் மத்தியில் நன்றாக பதிய வைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் விஜய் டிவிக்கும் நிறைய பங்கு இருக்கிறது.

சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

விஜய் டிவியில் இருந்து பல பேர் பெரிய இடத்திற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், சன் டிவியில் அப்படி குறிப்பிட்டு சொல்லும் படி யாரும் இல்லை. நான் எந்த சேனலையும் ஒப்பிட்டு பேசவில்லை. ஒருவேளை அவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து இருந்தால் மிஸ் பண்றோம் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சொன்னேன். எனக்கு அடுத்த சீசனில் தான் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ணினார் அவருக்கு 5 லட்சம் பரிசு கொடுத்தாங்க. ஆனா எனக்கு தரல. அதன் பின் நான் விளம்பர துறைக்கு சென்று விட்டேன். விளம்பரத் துறையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

வெங்கடேஷ் செய்யும் வேலை:

என்னால் சினிமாவில் நடிக்க நேரம் கிடைக்கவில்லை. மதுரையில்தான் நான் இருக்கிறேன். சென்னையில் ஆபீஸ் மட்டும் இருக்கு. சமீபத்தில் விளம்பரத் துறையில் இரண்டு நேஷனல் அவார்டு வாங்கி இருந்தேன். கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு வரத்துக்கு முன்னாடியே இந்த துறையில் இருக்கிறேன். 27 வருடமாக இந்த துறையில் இருக்கிறேன். அதனால் இயக்குனராக இருக்கும் நண்பர்கள் சிலர், நீங்கள் பெரிய இடத்தில் இருக்கிறீங்க உங்களுக்கு எப்படி நாங்கள் சம்பளம் கொடுப்பது என்றெல்லாம் சொல்லுவார்கள்.

அசத்தப்போவது யாரு சீசன் 2:

சினிமாவில் கூப்பிட்டால் எனக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது நான் ஈவன்ட் மேனேஜ்மென்ட், விளம்பரத்துறை என்று பிசியாக டிராவல் பண்ணி கொண்டு இருக்கிறேன். நான் 1500 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது அசத்தப்போவது யாரு சீசன் 2 விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார்கள் என்று பல விஷயங்களை பயணித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement