5,6 வருசத்துக்கு முன்னாடியே அவர் செத்துருவார்னு தான் நெனச்சோம் – கோவை குணாவிற்கு இருந்த பிரச்சனை குறித்து வெங்கடேஷ்.

0
457
Venkatesh
- Advertisement -

கோவை குணாவின் இறப்பிற்கான காரணம் குறித்து அசத்தப்போவது யாரு வெங்கடேஷ் கூறி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி 90ஸ் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை துவங்கி இருந்தார்கள். கலக்கப்போவது யாரு சீசன் 1 நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மதுரை முத்து உள்ளிட்டோரம் கலந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இதில் கவுண்டமணி,ஜனகராஜ் குரலில் பேசி தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் கோவை குணா. இந்த சீசனில் இறுதி போட்டியில் ரோபோ சங்கர் மதுரை முத்து கோவை குணா ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் கோவை குணா முதல் பரிசை வென்றார். தனது அசத்திய திறமை மூலம் பல கலைஞர்களின் மனதையும் கோவை குணா சம்பாதித்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் பலரது மிமிக்ரி கலைஞ்சர்களுக்கு இவர் தான் முன்னோடியாக இருந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணற்ற போட்டியாளர்களுக்கு சினிமாவிடம் வாய்ப்பு கிடைத்தது. ரோபோ சங்கர் அமுதவாணன், பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி என்று பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கோவை குணா அவர்களுக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

kovaiguna

ஆனால், இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த சில ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரியாமல் தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் நேற்று உடல் நிலை குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். கோவை குணாவின் இறப்பிற்கு நடிகர் மதன் பாப் மதுரை முத்து பழனி பட்டாளம் ரோபோ சங்கர் அமுதவாணன் என்று பல்வேறு கலைஞர்கள் இறப்பு தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால் கோவை குணாவின் இறப்பிற்கு என்ன காரணம் என்ற விவரம் இதுவரை யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் கோவை குணாவின் இறப்பு குறித்து அவருடன் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும் அவரின் நண்பனுமான வெங்கடேஷ் கூறி இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் ‘ கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது கடந்த மூன்று வருடங்களாகவே அவர் அதற்காக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளை அவருக்கு செய்து கொண்டு வந்தோம் சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பே அவர் இறந்து விடுவார் என்று அனைவருமே நினைத்தோம்.அந்த அளவிற்கு அவருடைய உடல்நிலை படுமோசமாக இருந்தது ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அவரை உற்சாகமாக வைத்திருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வது தான்.

கொரோனா லாக் டவுன் முன்பு வரை பரபரப்பாக பல நிகழ்ச்சிகளை செய்து கொண்டு தான் இருந்தார் ஆனால் கடந்த ஏழு எட்டு மாதங்களாக அவரால் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இரண்டு மகளுக்குமே திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.அவருடைய இந்த இழப்பு எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்புதான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement