தென்னிந்திய சினிமாவில் வெளிவந்த பிரபலமான படங்களில் ஒன்றாக இருந்தது பாபநாசம். 'த்ரிஷ்யம்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடங்கி தமிழ், கன்னடம், தெலுங்கு என அடுத்தடுத்து பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது த்ரிஷ்யம் படத்தினுடைய மூன்றாம் பாகத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவிருக்கிறது. த்ரிஷ்யம் தொடர்ந்து தமிழில் இயக்குனர் ஜீத்து ஜோசஃப், பாபநாசம் என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழில் பாபநாசம் படத்தில் கமலஹாசன், கௌதமி
உட்பட பலர் நடித்திருந்தார்கள். மிகப் பெரிய அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

மேலும், மலையாளத்தை தொடர்ந்து தமிழ் வெர்சனில் வில்லி கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தவர் நடிகை ஆசா சரத். இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஆஷா சரத் அளித்த பேட்டியில், பாபநாசம் படத்திற்காக எனக்கு சிறந்த வில்லி விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த விருது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பாபநாசம் படத்தை பேசுவதற்கு முன்னால் த்ரிஷ்யம் படத்தை பற்றி நான் பேச வேண்டும். அந்த படத்திற்காக தான் நான் முதன்முதலாக ஜீத்து ஜோசஃப் சாரை சந்தித்தேன்.
ஆஷா சரத் பேட்டி:
அந்த இரண்டு படங்களின் வாய்ப்பையும் கடவுள் எனக்கு கொடுத்ததாக நினைக்கிறேன். பத்து வருடங்கள் கடந்து இருப்பது எனக்கு ஒரு பெரிய சாதனையாகவும் பெருமையாகவும் இருக்கிறது. திரிஷ்யம் படத்திற்கு முன்பு நான் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மூன்றாவதாக தான் த்ரிஷ்யம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தினுடைய கதையை இயக்குனர் சொல்லும்போதே நான் மீனா ரோலில் தான் நடிக்கப் போகிறேன் நினைத்தேன். ஆனால், அதற்கு பிறகு தான் வில்லி கதாபாத்திரம் என்று தெரிந்தது. அது அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாக பொருந்தி நடிப்பேனா? என்றெல்லாம் யோசித்துக் கூட பார்க்கவில்லை. இயக்குனரும் மோகன்லால் சாரும் கொடுத்த நம்பிக்கையால் தான் அந்த படத்தில் நடித்தேன்.
https://www.youtube.com/watch?v=Eqz5A_H8_JU
பாபநாசம் பற்றி சொன்னது:
அதற்குப் பிறகு மலையாளத்தில் நடித்த எந்த நடிகருமே தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று இயக்குனர் சொல்லிவிட்டார். நான் கன்னட வெர்ஷனிலும் நடித்து விட்டேன். தமிழில் கீதா கதாபாத்திரத்திற்கு பலரையும் தேடி பார்த்திருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் இயக்குனர் என்னை அழைத்து பாபநாசம் படத்தில் நடிக்க வைத்தார். மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலுமே வில்லி கதாபாத்திரத்தில் நான்தான் நடித்திருந்தேன். மூன்றுமே எனக்கு ஒரு போலீஸ் கதாபாத்திரம் தான். ஆனால், வெவ்வேறு படங்களில் நடிப்பது போன்ற உணர்வைத் தந்தது.

பட அனுபவம்:
மூன்று மொழிகளிலும் சின்ன சின்ன மாற்றங்களை செய்திருந்தார்கள். தமிழில் கமல் சாரிடம் ஆரம்பத்தில் நான் பெரிதாக பேசவில்லை. அதற்கு பிறகு தான் மலையாள படங்களை பற்றி என்னிடம் கமல் பேசுவார். என்னுடைய நடனங்களை பற்றி கேட்பார். நான் பாபநாசம் படத்தில் நடிக்கும் போதே மோகன்லால் சார் என்னை தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தார். பாபநாசம் படத்திற்கு பிறகு எனக்கு அதிகமாக போலீஸ் கதாபாத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தான் வருகிறது.

கணவர் பற்றி சொன்னது:
அதனால் தான் தமிழில் பிரேக் அப் செய்துவிட்டேன். மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு முன்பு எனக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வந்தது. ஆனால், என்னுடைய பெற்றோர்கள் தான் ஒத்துக்கொள்ளவில்லை. என்னுடைய கணவர் கடவுள் கொடுத்த வரம் தான்.
அவர் என்னுடைய கனவுகளை புரிந்து கொண்டு என்னுடைய விருப்பப்படி செயல்பட விட்டார். அவருக்கு நான் நடிப்பது ரொம்பவே பிடிக்கும். எப்போதும் என்னுடைய கனவை நோக்கி நகரும் போது அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய கணவருடைய சப்போர்ட்டால் தான் என்னால் இவ்வளவு நாளும் சமாளிக்க முடிகிறது என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.






