அசோக் செல்வனின் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படம் ஒர்க்கவுட் ஆச்சா? முழு விமர்சனம் இதோ

0
186
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவந்திகா, எம்எஸ் பாஸ்கர், அழகம்பெருமாள், ஊர்வசி, படவா கோபி உட்பட பலன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் அசோக் செல்வன் சினிமாவில் எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அந்த சமயத்தில் தான் இவருக்கு ஹீரோயினி அவந்திகா மீது காதல் வருகிறது. அவந்திகா ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். இதற்கிடையில் அசோக் செல்வனுக்கு நெருங்கிய தோழி ஒருவர் இருக்கிறார்.

- Advertisement -

இவர் திடீரென்று கர்ப்பமாக இருக்கிறார். அந்த கர்ப்பத்தை கலைப்பதற்காக அசோக் செல்வனிடம் உதவி கேட்கிறார். அவரும் சம்மதம் சொல்லி மருத்துவமனையில் தன்னுடைய தோழியின் கணவன் என்று பொய் சொல்லி கருவை கலைப்பதற்கு உதவி செய்கிறார். இந்த விஷயம் அசோக் செல்வனின் காதலி அவந்திகாவுக்கு தெரியவந்து பெரிய பிரச்சனையே ஆகிறது. இதற்கடுத்து என்ன ஆனது? அசோக் செல்வனின் காதல் பிரிந்ததா? உண்மை அறிந்து இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

காதலர்கள் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கி இருக்கிறார். முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இரண்டாம் பாதி நன்றாக செல்கிறது. அசோக்செல்வன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தளங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

குறிப்பாக அசோக் செல்வனின் எதார்த்தமாக நடிப்பு படத்திற்கு பலம். இவரை அடுத்து படத்தில் வரும் ஊர்வசி, எம்எஸ் பாஸ்கர், பகவதி பெருமாள் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், படத்தில் வரும் நகைச்சுவைகள் எல்லாம் ரசிக்கப்படியாக இருக்கிறது. முதல் பாதியில் மட்டும் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும். பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. க்ளைமேக்ஸ் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு

கதைக்களம்

இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது

நகைச்சுவை சிறப்பு

குறை:

முதல் பாதியில் கவனம் செலுத்திருக்கலாம்

கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் சுவாரசியம் கொடுத்திருக்கலாம்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் எமக்கு தொழில் ரொமான்ஸ் – சிரிப்பு சத்தம்

Advertisement