தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் இவர் ஓ மை கடவுளே, போர் தொழில் படங்கள் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.சமீபத்தில் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் தான் தயாரித்தது.

இந்த படத்தில் சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் சூட்டிங் போது தான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்தது. பின் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அதன் பின் கடந்த ஆண்டு அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் தமிழர் திருமண மரபு படி நடைபெற்றிருக்கிறது.

Advertisement

அசோக்செல்வன் அம்மா பேட்டி:

இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. தற்போது இருவருமே படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அசோக் செல்வன் தன்னுடைய அப்பா- அம்மாவுக்காக புது காரை பரிசளித்திருக்கிறார். இது தொடர்பாக அசோக் செல்வனின் அம்மா மலர் அவர்கள் கூறியிருப்பது, எப்போதுமே அசோக் செல்வன் எங்களை மகிழ்வித்து கொண்டுதான் இருக்கிறார். அவன் சினிமாவில் நுழைந்த போது படத்துக்காக கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தில் கூட அவனுக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல் தீபாவளிக்கு எங்களுக்கெல்லாம் துணி வாங்கி கொடுத்தார்.

அசோக்செல்வன் குறித்து சொன்னது:

எனக்கு 12 ஆயிரம் ரூபாயில் அழகான பட்டுப்புடவை, ஜிமிக்கி எல்லாம் வாங்கி கொடுத்தான். இப்போது கொஞ்சம் பிரபலமான ஹீரோ ஆகிவிட்டார். ஆனால், அம்மா- அப்பா மேல் வச்சிருக்க பாசம், மரியாதைவும் குறையவே இல்லை. கூடுதலாக என்னோட மருமகள் கீர்த்தியும் அன்போடு இருப்பது நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையில் கனமழை பெய்ததால் எங்களுடைய ஸ்கோடா லாரா கார் வெள்ளத்தில் மூழ்கி போனது. பழுது பார்த்தாலும் சரியாகவில்லை. அதோடு டொயோட்டா ஹைக்ராஸ் ஹைப்ரிட் கார் என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடித்தது.

Advertisement

அசோக்செல்வன் வாங்கி தந்த கார்:

இந்த காரை வாங்கணும் என்று என்னுடைய கணவர் ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அந்தக் கனவை என்னுடைய மகன் நிறைவேற்றி விட்டான். அதோடு அவன் வாங்கி கொடுத்த காரில் ஒரு ஆச்சரியம் இருந்தது. அது என்னன்னா, எங்களுடைய திருமணம் 1986 ஆம் ஆண்டு நடந்தது. அதே வருஷத்திலேயே நம்பர் பிளேட்டை வாங்கி கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம் எங்களுடைய மருமகள் கீர்த்தி தான். அவர் முயற்சி செய்துதான் இந்த நம்பர் பிளேட்டை வாங்கி கொடுத்திருந்தாங்க. நம்பர் பிளேட் பக்கத்தில் வருகிற பி எஃப் என்ற வார்த்தை பெஸ்ட் பிரண்ட் என்று அர்த்தம்.

Advertisement

கணவன் மனைவியாக இருந்தாலும் நானும் அவரும் இப்போ வரைக்கும் நல்ல புரிதலோடு நண்பர்களாகவும் இருக்கிறோம். அந்த கார் ஓட விலை 35 லட்சம் ரூபாய். ஆனால், என் மகனோட அன்பு இந்த உலகத்தை விட மதிப்பில்லாதது. மேலும், எப்போ அசோக் சம்பாதிக்க ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரை எங்களை நன்றாக பார்த்துக் கொண்டு வருகிறான். எங்களை மட்டும் இல்லாமல் யாருக்கு கஷ்டம் என்றாலும் அவன் உதவி செய்கிறான். என் மனது ரொம்பவே குளிர்ந்து விட்டது என்று ஆனந்த கண்ணீரில் கூறியிருக்கிறார்.

Advertisement