அசினின் மகளா இப்படி வளர்ந்துட்டாங்க.! நீண்ட நாட்களுக்கு பின் அசின் வெளியிட்ட புகைப்படம்.!

0
1221
- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அசின். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அசினுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

-விளம்பரம்-

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தை தொடர்ந்து நடிகர் அசின் நடித்த கஜினி, சிவகாசி, வரலாறு, போக்கிரி போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தமிழில் இதுவரை கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அசின், இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்க : யாஷிகா பதிவிட்ட மோசமான புகைப்படம்.! அதிகம் பேர் பதிவிட்ட கமன்ட் இது தான்.! 

- Advertisement -

2015ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய அசின், பின்னர் 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே செட்டிலாகிவிட்டார் அசின்.

நடிகை அசினுக்கு திருமணம் முடிந்த ஓராண்டிலேயே ஒரு அழகான பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு ஆரின் என்று பெயர் வைத்தனர். இந்த நிலையில் தனது மகள் ஆரியனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அசின். குழந்தையாக பார்த்த அசினின் மகள் தற்போது குட்டிப் பெண்ணாக வளர்ந்து க்யூட்டாக உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement