அந்த ரோலை நான் பண்ண மாட்டேன் தைரியம் இருந்தா விஜய்ய நடிக்க சொல்லுங்க – சவால் விட்டுள்ள அஜித். (எந்த படம்னு பாருங்க)

0
408
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் அந்த படத்தில் இருந்து திடிரென்று விலகிவிட்டார். இப்படி ஒரு நிலையில் அஜித் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்தும் அதனை அஜித் மறுத்துள்ளது குறித்து பேசியுள்ளார் ராஜ்குமார்.

- Advertisement -

இயக்குனர் ராஜகுமரன் :

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு இயக்கிய நீ வருவாய் என படம் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி தான் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Parthiban Shares About First Shoot Experiencee With Ajith

நீ வருவாய் என :

மேலும், இவர் நடிகை தேவயானியை 2001இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இயக்குனர் ராஜகுமாரனின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் நீ வருவாய் என படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்களை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நீ வருவாய் என படத்தில் நடிக்க முதலில் விஜயிடம் பேசினோம்.

-விளம்பரம்-

விஜய் வேண்டாம் சார் :

அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் கெஸ்ட் ரோலில் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தார். பின் அஜித் இடம் மெயின் ரோல் பண்ண கேட்டு இருந்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு அஜித் சொன்னது, பொதுவாகவே ஹீரோயின் ஹீரோவை கடைசி வரை பிடிக்கல என்று சொன்னால் அது நன்றாக இருக்காது. மௌன ராகம் படத்தில் மோகன் மெயின் ரோலில் நடித்து இருந்தார். படத்தில் ரேவதி கடைசி வரை அவரை வேணாம் வேணாம் என்று சொன்னதால் தான் அந்த படத்திற்கு பிறகு மோகனுக்கு மார்க்கெட் குறைந்தது.

அஜித்தின் லாஜிக் :

அதேபோல் கார்த்திக் அந்த படத்தில் சில காட்சிகளில் வந்து இருந்தாலும் அந்த படத்துக்கு பிறகு அவருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் கிடைத்தது என்று சொன்னார். அதனால் மெயின் ரோலில் நான் பண்ண மாட்டேன். மேலும், விஜய் சாருக்கு தைரியம் இருந்தால் பண்ண சொல்லுங்க என்று கூறினார். அப்புறம் தான் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்தார். பார்த்திபனை மெயின் ரோலில் நடிக்க வைத்தோம் என்று கூறியிருந்தார். 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த நீ வருவாய் என படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தில் பார்த்திபன், அஜித், தேவயானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

Advertisement