இயக்குனர் மீது புகார் அளித்த அசுரன் பட நடிகை மஞ்சு வாரியார். கைது செய்த போலீசார்.

0
2856
manju-warrier
- Advertisement -

சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். மஞ்சு வாரியர் அவர்கள் மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாவார். அதுமட்டுமில்லாமல் மலையாள திரையுலகம் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-
manju

இந்த நிலையில் மலையாள இயக்குனர் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் என்பவர் மீது மஞ்சு வாரியர் புகார் அளித்திருப்பது மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில்செயல்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் விசாரணையின் போது எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் பெயரில் விடுவிக்கப்பட்டார். இந்த பிரச்சனை குறித்து விசாரித்ததில், நடிகை மஞ்சு வாரியர் முதலில் சில விளம்பரப் படங்களில் ஸ்ரீகுமார் மேனன் உடன் சேர்ந்து வேலை செய்து வந்தார்.

இதையும் பாருங்க : கோலாகலமாக நடந்த நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமின் இரண்டாம் திருமணம் வைரலாகும் புகைப்படங்கள்.

- Advertisement -

மேலும், அவருடன் நட்பாக பழகினார். அதோடு ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ‘ஓடியன்’ என்ற படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். ஆனால்,அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட்டுக் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மஞ்சு வாரியர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருந்தன. மஞ்சு வாரியர் அவர்கள் வயநாட்டில் உள்ள ஒரு பழங்குடி பிரிவினை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளார் என்றும், அவர் அளித்த உறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.

மேலும்,மஞ்சு வாரியர் மோசடி செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் மீது பழங்குடி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள் என்று இணையங்களில் வருகிறது. அது மட்டும் இல்லாமல் அறக்கட்டளை பணமரம் பஞ்சாயத்தில் பரகுனியில் உள்ள பனியா சமூகத்தை சேர்ந்த பழங்குடி மக்களுக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பு செலவில் 50 குடும்பங்களுக்கு வீடு கட்டி தருகிறேன் என நடிகை மஞ்சு வாரியர் வாக்குறுதி அளித்திருந்தார். இது சம்பந்தமாக கடிதம் ஒன்றில் ஜனவரி 2017 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் பனமரம் கிராம பஞ்சாயத்து மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

-விளம்பரம்-

ஆனால், இரண்டு ஆண்டுகள் கழிந்தும் வீடு சம்பந்தமாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மேலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பழங்குடியினர் மக்களை குற்றம் சாட்டி இருந்தார்கள். அப்போது தான் 2018 ஆம் ஆண்டு அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் அழிந்தது. அதோடு இந்த பழங்குடியினர் மக்கள் இருந்த வட்டாரத்தில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அறக்கட்டளை உதவி செய்வதாக உறுதி அளித்து இருந்தார்கள். ஆனால், அரசாங்க அதிகாரிகள் யாரும் எந்த ஒரு உதவியும் , உதவித் தொகையையும் வழங்க முன்வரவில்லை. மேலும்,அறக்கட்டளையும் கூட எந்த உதவியும் செய்யவில்லை என்பது உறுதியான ஒன்று. இப்படி சமூகவலைதளங்களில் நடிகை மஞ்சு வாரியர் சம்பந்தமாக வரும் அத்தனை தகவல்களும் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் தான் காரணம் என்று முடிவு செய்து போலீசில் புகார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement