கோலாகலமாக நடந்த நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமின் இரண்டாம் திருமணம் வைரலாகும் புகைப்படங்கள்.

0
30539
Nithyaram

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அதற்கு முக்கிய காரணமே சீனாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் போட்டி போட்டுகொண்டு கவர்ச்சி காண்பித்து நடித்து வருவதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான சுந்தர்சி சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ஆனால், இவர் சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடர் மூலம் தான்.

இயக்குனர் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் உருவான இந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடராக இருந்துவந்தது. இந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை நித்யா ராம். சின்னத்திரை சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரை தான் சாரும். இந்தத் தொடரில் நாக கன்னியாக நடித்த நித்யா ராம் மிகவும் கவர்ச்சியாக நடித்து இளசுகள் மனதையும் கொள்ளை கொண்டார்.

இதையும் பாருங்க : இவரு தான் மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை வென்ற மீரா மிதுனின் தந்தை. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நித்யா ராம் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆரம்பத்தில் கன்னடத்தில் ஒளிபரப்பான ஒரு தொடரில் நடித்திருந்தார். அந்த தொடர் மிகப்பெரிய வெற்றி அடைய அடுத்தடுத்து தொடர்களில் நடித்து வந்தார். மேலும் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மொட்டு மனசே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையாததால் தனது முழு கவனத்தையும் சீரியல் பக்கம் திருப்பினார். நித்யாராம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அவள்’ என்ற தொடர் மூலம் தான். அதன் பின்னர் நந்தினி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.

View this post on Instagram

Nandhini Serial Fame #NithyaRam Second Marriage

A post shared by Behind Talkies (@behindtalkies) on

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ் ‘என்ற தொடரிலும் அவ்வப்போது கண்காணித்து வருகிறார். நித்யாராம் கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் நடிகை நித்யா ராம் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை நித்யா ராம் சில காலமாக காதலித்து வருவதாகவும் அவரை தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள்வெளியான நிலையில் தற்போது இவர்களது திருமணம் கோலாகாலமாக நடிப்பெற்றுள்ளது. .

-விளம்பரம்-
Advertisement