வெளியானது அசுரன் பட தெலுங்கு ரீ – மேக் ‘நாரப்பா’ படத்தின் ட்ரைலர். எப்படி இருக்குன்னு நீங்களே சொல்லுங்க.

0
50850
Asuran

ஆடுகளம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் “அசுரன்”. இந்த படம் “வெட்கை” என்ற நாவலின் அடிப்படையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரித்துஇருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துஇருந்தார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பசுபதி,பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நடிகர்கள்நடித்து இருந்தனர் . இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு லுக்கில் நடித்து இருந்தார் தனுஷ்.

Venkatesh film Narappa opts for direct OTT release, to stream on Amazon  Prime Video from this date | Entertainment News,The Indian Express

இந்த அசுரன் படக்கதை 80களில் ஆரம்பித்து 60க்கு பயணித்து மீண்டும் 80களில் முடியும் கதை. இந்த படத்தில் ஜாதி மோதல், குடும்பத்தை பழிக்குப்பழி, காதல் என அழகாக கதையை கொடுத்து இருந்தார் இயக்குனர். இந்த படத்தில் நரேன் குடும்பத்திற்கும், சிவசாமி (தனுஷ்) குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து கொண்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் 40 வயதிற்கு மேற்பட்ட சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தனுஷ் மனைவியாக மஞ்சு வாரியர், திருமண வயதில் இருக்கும் மூத்த மகன் முருகன் (அருணாசலம்), பள்ளிக்குச் செல்லும் இளைய மகன் (கென்), சிறு மகள், மச்சான் பசுபதி என அழகான குடும்பம்.

இதையும் பாருங்க : “என் மாப்ள விஜய்-ஆ வாழ்றது என்பது ” – விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான பிரபலம் போட்ட பதிவு.

- Advertisement -

நரேனின் பழிவாங்கும் குணத்தால் தன் குடும்பத்தை காப்பாற்ற தனுஷ் அசுர வேட்டை ஆடுகிறார். அதோடு எல்லாரிடமும் இருந்து எல்லாத்தையும் வாங்கி கொள்ளலாம் ஆனால், ஒருவரின் அறிவை என்றும் திருட முடியாது டயலாக் மூலம் தெறிக்க விட்டார் என்று சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீ மேக் செய்து இருக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இந்த படத்தை பலரும் கலாய்த்து இருந்தனர். அசுரன் போன்ற ஒரு நல்ல படத்தை ரீ – மேக் செய்து கெடுத்துவிட வேண்டாம் என்றும் கூறினர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அசுரன் படத்தில் மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி இந்த படத்திலும் நடிக்கிறார். மேலும், இந்த படம் வரும் 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement