“என் மாப்ள விஜய்-ஆ வாழ்றது என்பது ” – விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான பிரபலம் போட்ட பதிவு.

0
6343
vijay
- Advertisement -

சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விஜய்க்கு நேற்று, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடியவர். தற்போது வரை 64 படங்கள் நடித்துள்ள அவருக்கு பல நூறு கோடிகளில் சொத்து இருக்கலாம் என யூகிக்கமுடிகிறது.பிகில் படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய், இறுதியாக வெளியான மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இவரது சம்பளம் 100 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Vijay Friend Actor Srinath Shared Unseed Childhood Pic Of Vijay

தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டே நபர்களிடம் தான் இருக்கிறது. அதில் விஜய்யும் ஒருவர். 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார்.

இதையும் பாருங்க : என்னது, நான் அவரை காதலிக்கிறேனே – மனம் திருந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.

- Advertisement -

அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், அதனால் நுழைவு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணை சென்னை உயர் நீதி மன்றத்தில் வந்த போது, மூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு, வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்துக்கு சமம் என்று என்று கூறியுள்ளனர். மேலும், நடிகர் விஜய்க்கு 1,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைத்தளத்தில் வரிகட்டுங்க_விஜய் ட்ரெண்டிங்கில் வந்ததோடு விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், விஜய்க்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், “என் மாப்ள விஜய்-ஆ வாழ்றது ரொம்ப கஷ்டம். என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ஸ்ரீநாத் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் தொடங்கி இறுதியாக வெளியான ‘மாஸ்டர் ‘ படம் வரை விஜய்யுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும்,

Advertisement