அசுரன் பட ரீ-மேக்கில் வெங்கடேஷ் – இளம் சிவசாமி கெட்டப்பில் வெளியான போஸ்டர். இந்த முறை நாரப்பாவை தமிழ் ரசிகர்கள் என்ன செய்ய இருக்காங்களோ.

0
4217
asuran

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படம் “அசுரன்”. இந்த படம் “வெட்கை” என்ற நாவலின் அடிப்படையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரித்து இருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துஇருந்தார் . இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பசுபதி,பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துஅசத்தி இருந்தார்.

இந்த படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் 130 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இந்நிலையில் தனுஷின் அசுரன் படத்தை தெலுங்கில் “நரப்பா” என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரபலமான நடிகர் வெங்கடேஷ் அவர்கள் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி அவர்கள் நடிக்கிறார். அசுரன் என்ற டைட்டில் நரப்பா என்று வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்குகிறார்.

இதையும் பாருங்க : ஷகீலாவின் திருநங்கை மகளை பார்த்துள்ளீர்களா ? அவருடைய பெயர் தங்கமாம். அவர் என்ன செய்கிறார் தெரியுமா ?

- Advertisement -

அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவே இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜனவரி மதம் வெளியாகிஇருந்தது . இந்த படத்தின் போஸ்டரை பார்த்து தமிழ் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இதை பார்த்து ரசிகர்கள் எல்லாரும் சோசியல் மீடியாவில் பலவிதமாக விமர்சனம் செய்தும், கிண்டலும், கேலியும் செய்தும்வந்தனர். தெலுங்கில் இருந்து பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகுவதும், தமிழில் இருந்து பல படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகுவதும் வழக்கமான ஒன்று.

அந்த வகையில் அசுரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிருப்தியை தெரிவித்தனர். அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கிண்டல் செய்யும் தமிழ் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கு ரசிகர்களும் தமிழ் நடிகர்களையும் தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு தமிழ் படங்களையும் கிண்டல் செய்து பல்வேறு மீம்களை பரப்பி வந்தனர். இப்படி ஒரு நிலையில் அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் இளமை தோற்றத்தில் நடித்தது போல வெங்க்டேஷும் இந்த படத்தில் இளமை தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

-விளம்பரம்-
Advertisement