என்னை தான் இளம் வயது முரளிதரனாக நடிக்க கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன் – காரணத்தை சொன்ன அசுரன் பட நடிகர்.

0
21504
teejee
- Advertisement -

முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்று படத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார் அசுரன் பட நடிகர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். எம்.எஸ்.ஶ்ரீபதி என்பவர் இயக்கும் இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. அப்போதே  வி.சி.க, பெரியாரிய அமைப்புகள் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் `தமிழினத் துரோகி ராஜபக்‌ஷே-வின் ஆதரவாளரான முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது’ எனக் கோரிக்கை வைத்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

-விளம்பரம்-

00 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார். ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது” என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் சிறு வயது முத்தையா முரளிதரனாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார் அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம்.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் இந்தியாவில் இருந்தபோது, ​​800 தயாரிப்பாளர்கள் என்னை அணுகியிருந்தனர். திரைப்பட தயாரிப்பாளரை நான் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன், அவர் ஸ்கிரிப்ட்டின் அணைத்து கதைகளையும் ஒன்று விடாமல் சொன்னார். இந்த படத்தில் முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நானும் , மூத்த வயது முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி சாரும் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் அம்மா ஈழ தமிழச்சி தான். போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் கதைகளின் அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை. எனவே, நான் அவர்களிடம் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னேன்.

Asuran' fame Teejay Arunasalam on board 'Vikram 58'? | The News Minute

விஜய் சேதுபதி ஐயா மீது எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதால் அவருடன் நிறைய பேசியுள்ளதால் இது ஒரு கடினமான முடிவு. அசுரானில் வெல்முருகன் போன்ற ஒரு வலுவான பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்காக அவர் என்னைப் பாராட்டினார், மேலும் சரியான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும்படி என்னிடம் கூறினார். அதனால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். நடிகர் டீஜே அருணாசலத்தின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதே போல முடிவை விஜய் சேதுபதி எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

-விளம்பரம்-
Advertisement