தமிழ் சினிமா நடிகர்களை கேலி செய்த தெலுங்கு ரசிகர்கள் – பதிலடி கொடுத்த தமிழ் ரசிகர்கள் (நம்மகிட்ட முடியுமா)

0
10889
kollywood
- Advertisement -

சமீப காலமாக தமிழ் ஹிட் அடித்த பல்வேரு படங்கள் தெலுங்கில் ரீ – மேக் ஆகி வருகிறது. அந்த வகையில் தணுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படமும் தெலுங்கில் ரீ – மேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தை தெலுங்கில் எடுப்பதாக அறிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இந்த படத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார் என்று அறிந்ததும் தமிழ் ரசிகர்கள் பலரும் கேலி செய்தனர். ஏற்கனவே தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தின் தெலுங்கு ரீ – மேக்கில் கூட வெங்கடேஷ் தான் நடித்து இருந்தார். ஆனால், அசுரன் போன்ற ஒரு தரமான படத்தை ரீ – மேக் செய்வதையே தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதையும் பாருங்க : அடுத்த வருடத்தில் கல்யாணம், அதுவும் கணவர் பெயரோடு சொன்ன ஜோசியர் – நான்காம் திருமணம் பற்றி வனிதாவின் ஆசை.

- Advertisement -

இந்த திரைபடம் திரையரங்குகளில் தான் வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு உள்ளார்கள். இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அதிலும் வெங்கடேஷின் தீவிர பெண் ரசிகை ஒருவர் இந்த படத்தை OTT வெளியிட கூடாது என்று கையை எல்லாம் கிழித்துக் கொண்டு வீடியோ வெளியிட்டார்.

இருப்பினும் இந்த திரைப்படம் நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கும் எந்த அளவிற்கும் தெலுங்கு மக்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைத்து இருக்கும் என்பதை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள். ஆனால், இந்த படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மற்றும் வெங்கடேஷ் ரசிகர்கள் ட்விட்டரில் பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டனர்.

-விளம்பரம்-

தனுஷ் தான் சிறந்த நடிகர் என்று ஒரு தரப்பினரும் வெங்கடேஷ் தான் சிறந்த நடிகர் என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றனர். தனுஷ் மற்றும் வெங்கடேஷை ஒப்பிட்டு துவங்கி தற்போது தமிழ் சினிமா சிறந்ததா தெலுங்கு சினிமா சிறந்ததா என்று ட்விட்டரில் ஒரு பணிப் போரே நடந்து வருகிறது. இதனால் ட்விட்டரில் #TollywoodDominatingIndia மற்றும் KWoodDominatingIndia என்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டிங்கள் கூட வந்தது.

Advertisement