அடுத்த வருடத்தில் கல்யாணம், அதுவும் கணவர் பெயரோடு சொன்ன ஜோசியர் – நான்காம் திருமணம் பற்றி வனிதாவின் ஆசை.

0
2858
vanitha
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட இதனை உறுதி செய்ததாக செய்தி வெளியிடப்பட்டது. இதனை மறுத்துள்ள வனிதா, என்னைப் பற்றி சினிமா விகடன் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது.

-விளம்பரம்-
vanitha

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட குற்றமா, உடனே அவர்களுக்குத் திருமணம் என யாராவது சொன்னால் அதை செய்தியாக்கிவிடுவது தவறில்லையா? என்னை இந்த செய்தி மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதர்க்கு சினிமா விகடனும் மன்னிப்பு தெரிவித்து இருக்கிறது.

இதையும் பாருங்க : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா. எத்தன மாசம் தெரியுமா ?

- Advertisement -

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த வனிதா, ’நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப ’என்று பதிவு செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் யூடுயூப் சேனல் ஒன்றில் யோசியகாரர் ஒருவருடன் பேட்டி ஒன்றில் பங்கேற்றார் வனிதா. அந்த பேட்டியில் வனிதாவின் ஜாதகத்தை ஆராய்ந்த அந்த ஜோசியர், அடுத்த ஆண்டுக்குள் வனிதா நான்காவது திருமணம் செய்வார் என்று கூறி இருந்தார்.

இதற்கு வனிதா, இன்னும் நிக்கா தான் பண்ணனும், யாராவது கான தான் கட்டணும், ஆமீர் கானுக்கு வேறு டைவர்ஸ் ஆக போகுதாம் என்று பூரித்து பேசினார். இருப்பினும் கண்டிப்பாக அடுத்த ஆண்டுக்குள் உங்களுக்கு திருமணம் ஆகும். அதுவும் உங்கள் நான்காவது கணவரின் பெயர் ‘s’ என்ற எழுத்தில் தான் தொடங்கும் என்றும் கூறினார். அதே போல நீங்கள் ஜெயலலிதா போல தைரியமான பெண் நீங்கள் அரசியலிலும் சாதிப்பீர்கள் என்றும் கூறியுள்ளார் அந்த ஜோசியர்.

-விளம்பரம்-
Advertisement