குடி போதையில் தாறுமாறாக வண்டி ஓட்டி நிற்காமல் சென்ற நடிகை – மடக்கி பிடித்த மக்கள். ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதானவர்.

0
487
aswathi
- Advertisement -

போதையில் தாறுமாறாக காரில் சென்று நடிகையை மக்கள் விரட்டி பிடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு. மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் அஸ்வதி பாபு தன்னுடைய காதலன் நவுபலுடன் நேற்று கொச்சி அருகே காரில் தாறுமாறாக சென்றிருக்கிறார். குறிப்பாக, கொச்சி குசாட் சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், பைக் மற்றும் தடுப்புகளில் உரசியபடி அதிவேகத்தில் அஸ்வதி பாபு காரில் சென்று இருக்கிறார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் சொல்லி இருந்தார்கள்.

- Advertisement -

அதோடு அஸ்வதி பாபு காரையும் மக்கள் பின்தொடர்ந்து இருக்கின்றன. அவர்களின் காரை முந்தி சென்ற சிலர் அவர்களை மறித்தனர். ஆனால், வழி மறித்தவர்களிடம் இருந்து தப்பிக்க காரை அருகில் உள்ள பகுதியில் கீழ் நோக்கிச் சென்றார் அஸ்வதி பாபு. அப்போது அந்த பகுதியின் சாலையில் இருந்த கற்களில் ஏறி காரின் டயர் வெடித்தது. வேறு வழியில்லாமல் காரில் இருந்து இறங்கி அஸ்வதி பாபு மற்றும் அவரது காதலனும் தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

அதோடு இருவருமே போதையில் இருந்தது தெரியவந்தது. அங்கு இருந்தவர்களிடம் இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வருவதற்குள் இருவரும் அருகில் உள்ள கடைக்கு சென்று பொருள் வாங்குவது போல பதுங்கி விட்டனர். பிறகு திருக்காக்கரை பகுதியை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் கடைக்குள் நுழைந்து மடக்கிப்பிடித்தனர். பின் மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு இருவரையும் அழைத்துச் சென்றிருந்தனர்.

-விளம்பரம்-

விசாரணையில் இருவருமே போதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கின்றனர். இதனிடைய அஸ்வதி பாபு கடந்த 2018 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சாலைக்கு சென்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக திற்காக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று போலீஸ் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு எம்டிஎம்ஏ என்ற போதை பொருள் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் கார் டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைது செய்யப்பட்டார். பின் இவர்கள் பெங்களூரில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து இங்கு வைத்து பொருளை விற்று வந்தது தெரியவந்தது. இப்படி பல வழக்கில் நடிகை அஸ்வதி பாபு சிக்கி இருக்கிறார்.

Advertisement