இந்த சேனல் உங்களின் இந்த படத்தை கொன்னுப்புட்டாங்க – மாதவனிடம் புலம்பிய அஸ்வின்.

0
5055
aswin

தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது.

வீடியோவில் 18 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த படத்திற்கு பின்னர் மாதவன் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படமும் மாதவனுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் தான் மாதவனுக்கு மேடி என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. இந்த நிலையில் இந்த படத்தை டிவியில் பார்த்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மாதவனுடனான லைவ் சாட்டின் போது கூறியுள்ளார்.

- Advertisement -

கொரோனா ஊரடங்கு நிலையில் பல நடிகர், நடிகைகளும், பிற துறை பிரபலங்களும் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube தளத்தின் வாயிலாக அனைத்து துறை கலைஞர்களுடனும் உரையாடி வருகின்றார். இந்நிலையில் இவர் நடிகர் மாதவனுடன் தனது youtube வழியாக உரையாடி இருந்தார். அப்போது மாதவன் நடித்த பல்வேறு படங்களை பற்றி புட்டு புட்டு வைத்தார் அஸ்வின்.

இந்த உரையாடலின் போது மாதவன் படத்தின் மின்னலே படம் குறித்து பேசிய அஸ்வின், இந்த படம் வெளியான போது நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அந்த படத்தை பார்த்துக்கொண்டே நான் கணக்கு படத்தை கூட போடுவேன். அப்போது ராஜ் டிவியில் ‘திரைமின்னல்கள்’ என்ற பெயரில் இரவு 8.01 மணிக்கு மின்னலே படத்தை போட்டு தள்ளிவிடுவான். நானும் அந்த படத்தை பார்க்க உக்கார்ந்தாள் வெறும் விளம்பரமாக தான் போடுவான். அப்புறம் நான் ஆப் செய்துவிட்டு கம்பியூட்டர்ல போய் பாத்துட்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement