விஜய் வீட்டின் மாப்பிள்ளை ஆகிறார் அதர்வாவின் தம்பி. அதுவும் காதல் திருமணமாம்.

0
148261
atharva vijay
- Advertisement -

விஜய் வீட்டின் மாப்பிள்ளையாக அதர்வா தம்பி ஆனார். மேலும்,’காதலுக்கு மரியாதை’ படத்தின் கிளைமேக்ஸ் தான் இங்கும் நடந்து உள்ளது. சினிமா துறையில் முக்கிய புள்ளிகளாக திகழ்பவர்கள் நடிகர் முரளி மற்றும் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் குடும்பம். இவர்கள் தற்போது உறவினராக மாறப் போகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 6ம் தேதி சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாசுக்கும், பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேத்தி சினேகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த திருமணம் முற்றிலும் காதல் திருமணம் என்பதில் ஐயமே இல்லை. நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ். அவர் சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்து உள்ளார். சிங்கப்பூரில் அவரோடு கூட படித்தவர் தான் இயக்குனர் எஸ்.ஏ.சி பேத்தி சினேகா பிரிட்டோ. மேலும்,படிக்கும்போதே இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
அதர்வா தம்பி ஆகாஷ், சினேகா

- Advertisement -

மேலும், எஸ்.ஏ.சி உடன் கூடப் பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள் தான் சினேகா. அதாவது நம்ம இயக்குனருக்கு பேத்தி முறை. மேலும், விமலாவின் கணவர் பிரிட்டோ. இவர் சென்னையில் பள்ளி, கல்லூரி, ஓட்டல், ரெஸ்டாரண்ட் என நடத்தி வரும் தொழிலதிபர், இது மட்டுமில்லாமல் இவர் ஷீப்டிங் தொழிலிலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் “தளபதி 64” படத்தின் தயாரிப்பாளரும் இவர் தான். மேலும், சினேகா வளர்ந்தது எல்லாம் விஜய் வீட்டில் தான். அது மட்டுமில்லாமல் தாத்தா தாத்தா ன்னு எஸ். ஏ. சந்திரசேகர் பின்னாடியே சுத்திகிட்டு அவருடைய ஆபீஸ்லேயும் தான் இருப்பாராம். அதனால அவருக்கு இயல்பாகவே சினிமா கனவு வந்தது என்றும் சொல்லலாம். மேலும், சினிமா ஆசைக்கு தாத்தாவும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து “சட்டம் ஒரு இருட்டறை 2” படத்தை இயக்கி சினேகா இயக்குனராக அறிமுகமானார்.

இதையும் பாருங்க : இந்த வயதிலும் இப்படி ஒரு அம்மா சென்டிமென்டா அஜித்துக்கு. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சொன்ன ரகசிகம்.

இது ஒரு பக்கம் இருக்க நம்ம நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் இப்போது சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் பிசினஸ் நடத்தி வருகிறார். மேலும்,இவர் சினிமாவில் நடிக்க ஐடியா இருக்கு என்றும் கூறியிருக்கிறார். அதற்கான முயற்சிகளையும் செய்து உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், இரண்டு பேரும் தங்களுடைய காதலை வீட்டில் சொன்னவுடன் இருதரப்பிலும் பயங்கரமாக பிரச்சனை ஏற்பட்டது. ஏனென்றால் இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணம் மதம். ஆனால், இவர்கள் இருவரும் தங்களுடைய காதலில் கடைசி வரை உறுதியாக இருந்தார்கள். சொல்லப்போனால் விஜயின் “காதலுக்கு மரியாதை” படத்தின் கிளைமாக்ஸ் மாதிரி. காதலுக்கு மரியாதை படத்தில் வந்த மாதிரி இவர்களுடைய காதலுக்கு போராடி கடைசியில் இருவீட்டாரிடம் சம்மதம் வாங்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-
sneha

Sneha britto and Vijay

மேலும், இவர்கள் நிச்சயதார்த்தத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. திருமண தேதியை நிச்சயதார்த்தத்தின் போது அறிவிப்பார்கள் என்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது. அதோடு அண்ணன் அதர்வா திருமணம் செய்யாமல் இருந்ததனால் தான் தன்னுடைய காதல் குறித்து ஆகாஷ் பேசாமல் இருந்ததாக கூறினார். ஆனால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் ஆகாஷ் கூறினார். மேலும், இந்த கல்யாண வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் ஸ்னேகா தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலையை தொடங்கிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement