SK25 படத்தில் நடிப்பதற்கு காரணம் இது தான் என்று அதர்வா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவரை அதிகம் ‘இதயம் முரளி’ என்று தான் அழைப்பார்கள். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரின் மூத்த மகன் தான் அதர்வா. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. இருந்தும் இவர் விடாமுயற்சியுடன் படங்களில் நடித்துக் கொண்டு வருகின்றார். தற்போது அதர்வா அவர்கள் அட்ரஸ், தானா உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதர்வா பற்றிய தகவல்:
அந்த வகையில் இவர் தற்போது சிவகார்த்திகேயனின் sk25 என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

சிவகார்த்திகேயன் படம்:
அந்த வகையில் சமீபத்தில் சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இதை அடுத்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=FchucqFNqps
SK25 படம்:
இதை அடுத்து தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் sk25 என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை நடைபெற்றிருந்தது. இதில் ஜெயம் ரவி, அதர்வா, இயக்குனர் சுதா, சிவகார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அதர்வா பேட்டி:
தற்போது படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அதர்வா, பரதேசி படத்திலிருந்து எனக்கு சுதா கொங்கராவை நன்றாக தெரியும். நாங்கள் இருவருமே ரொம்ப க்ளோஸ் பிரன்ட்ஸ். மீண்டும் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லி இருந்தார். அதற்காகத்தான் இந்த படத்தில் பண்ணலாம் என்று சொன்னார்கள். இந்த படத்தில் நடிக்கும் எல்லோருமே எனக்கு தெரிந்தவர்கள் தான் என்று கூறி இருந்தார்.






