தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அதர்வா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிஎன்ஏ. இந்த படத்தை நெல்சன் வெங்கடேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நிமிஷா விஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ அதர்வாவிற்கு ஆரம்பத்திலேயே காதல் தோல்வி அடைந்ததால் கஞ்சா, குடி என்று போதைக்கு அடிமையாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேர்ந்து அதர்வாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் கொஞ்சம் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். அதர்வா- நிமிஷா சஜயன் இருவருக்குமே திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு இருவருமே சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இதற்கிடையில் குழந்தை கடத்தல்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது மருத்துவமனையிலேயே அதர்வாவின் குழந்தையை கடத்தி அதற்கு பதில் வேறொரு குழந்தையை வைத்து விடுகிறார்கள். இந்த விஷயம் நிமிஷாவுக்கு தெரிந்து விடுகிறது. அதற்கு பின் தன்னுடைய குழந்தையை தேடி அதர்வாத் தேடி செல்கிறார்.

இறுதியில் அதர்வா குழந்தை கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா? அதர்வாவின் குழந்தை கிடைத்ததா? நிமிஷாவின் மனநிலை என்ன? குழந்தை கடத்தலுக்கு பின்னால் இருக்கும் சதி வேலைகள் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ அதர்வா அவர்கள் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் பிரேக் அப் பிறகு குடித்துவிட்டு ரகளை செய்யும் இளைஞனாகவும், திருமணத்திற்கு பிறகு பொறுப்பான தந்தையாகவும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரை அடுத்து ஹீரோயினாக வரும் நிமிஷா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலுமே தன்னுடைய குழந்தை பிரிந்து வாடும் ஒரு அம்மாவின் கதாபாத்திரத்தை நம் கண் முன்னே நிறுத்திருக்கிறார். டிஎன்ஏ முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி சூடு பிடித்து நன்றாக தெரிகிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகள் நன்றாக இருக்கிறது.
வழக்கமான குழந்தை கடத்தல் கதையாக இருந்தாலும் இயக்குனர் கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது.

இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களின் நடிகர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தை ஒரே நோக்கோட்டில் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
பல காட்சிகள் விசில் பறக்கும் அளவிற்கு இருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என அனைத்தையுமே இயக்குனர் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சில இடங்களில் எமோஷன் தவறினாலும் கதையினுடைய மையத்தை இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் அதர்வாவின் டிஎன்ஏ படம் திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்.
நிறை:
அதர்வா நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை,ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
கிளைமாக்ஸ் சூப்பர்

குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது.
சில இடங்களில் எமோஷனல் காட்சிகள் பெரிதாக கவரவில்லை
பாடல்கள் சுமார்
மொத்தத்தில் டிஎன்ஏ - தனித்து நிற்கும்






