அதர்வாவின் டின்ஏ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்இந்திய சினிமா திரை உலகில் 80, 90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவரை அதிகம் ‘இதயம் முரளி’ என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரின் மூத்த மகன் தான் அதர்வா. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. இருந்தும் இவர் விடாமுயற்சியுடன் படங்களில் நடித்துக் கொண்டு வருகின்றார். அந்த வகையில் அதர்வா அவர்கள் அட்ரஸ், தானா உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதர்வா திரைப்பயணம்:
அதோடு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என்ற படத்தில் அதர்வா நடிக்கிறார். இதை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது அதர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிஎன்ஏ. இந்த படத்தை மான்ஸ்டர், பர்கானா படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார்.

டிஎன்ஏ படம்:
இந்த படத்தில் நிமிஷா சஜயன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இந்த படம் கோலாகலமாக வெளியாகி இருக்கிறது.
படத்தின் வசூல்:
அதர்வாவின் டிஎன்ஏ படத்திற்கு போட்டியாக தனுஷின் உடைய குபேரா படமும் வெளியாகி இருக்கிற.து
டிஎன்ஏ படம் நன்றாக இருந்தாலும் மக்களின் கூட்டம் தான் வரவில்லை. பெரும்பாலானோர் குபேரா படத்தின் மீதுதான் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் டிஎன்ஏ படம் 43.79 லட்சம் தான் வசூல் செய்திருக்கிறது. ஆனால், குபேரா படம் 3.5 கோடி வசூல் செய்தது. இனிவரும் நாட்களில் அதர்வாவின் டிஎன்ஏ படம் வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

படத்தின் கதை:
படத்தில் ஹீரோ அதர்வாவிற்கு ஆரம்பத்திலேயே காதல் தோல்வி அடைந்ததால் கஞ்சா, குடி என்று போதைக்கு அடிமையாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேர்ந்து அதர்வா- நிமிஷா சஜயன் இருவருக்குமே திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இருவருமே சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இதற்கிடையில் குழந்தை கடத்தல்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது மருத்துவமனையிலேயே அதர்வாவின் குழந்தையை கடத்தி அதற்கு பதில் வேறொரு குழந்தையை வைத்து விடுகிறார்கள். இந்த விஷயம் நிமிஷாவுக்கு தெரிந்து விடுகிறது. அதற்கு பின் தன்னுடைய குழந்தையை தேடி அதர்வாத் தேடி செல்கிறார். இறுதியில் அதர்வா குழந்தை கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா? அதர்வாவின் குழந்தை கிடைத்ததா? நிமிஷாவின் மனநிலை என்ன? குழந்தை கடத்தலுக்கு பின்னால் இருக்கும் சதி வேலைகள் என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






