சிம்புக்கு எல்லாம் இப்படி ஒரு பொண்ணு தான் கிடைக்கும் – அஜித் அரசியலுக்கு – பெண் சித்தரின் சர்ச்சை பேட்டி. வீடியோ இதோ.

0
1987
ajith

சமீபகாலமாக பரபரப்பான பேட்டிகளை கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பெண் சித்தர் லட்சுமி அம்மாள். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் சிம்பு குறித்து பேசியுள்ளதாவது,  சிம்பு மிகவும் நல்லவர் என்றும், குழந்தை மாதிரி தனக்கு இப்படித்தான் ஒரு மனைவி வர வேண்டும் என்று தேடி வருகிறார் என்றும், ஆனால் அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் தோஷம் நிவர்த்தி செய்தால் கண்டிப்பாக அழகான பெண் கிடைக்கும் என்றும், ஆனால் அந்த பெண் வாயாடி பெண்ணாகத் தான் இருப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும், நடிகர் அஜித் குறித்து பேசுகையில், நடிகர் அஜித் அன்புக்கு ஏங்குபவர். அன்பினால்தான் அவர் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இன்று அன்புக்கே உலை வைத்தது போல் உள்ளது. அஜித் நல்ல மனிதர். அவர் 2013-ஆம் ஆண்டு முதல் வேதனையில் இருக்கிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியுள்ளார் சித்தர் லட்சுமி அம்மாள்.

- Advertisement -

சித்தர் லட்சுமி அம்மாள் லட்சுமி அம்மாள், சிம்பு குறித்து சொன்னது வேண்டுமானால் எதோ ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் வேண்டாம் என்று அணித்தனமாக இருந்து வரும் அஜித் குறித்து பேசியுள்ளது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு பா ஜ க கட்சி நடத்திய விழா ஒன்றில் அஜித்தின் ரசிகர்கள் சிலர் கட்சியில் இணைந்தனர். இதயடுத்து அஜித் ரசிகர்கள் தமிழகத்தில் தமரையை மலர செய்வார் என்றும் தமிழசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருந்தார்.

அப்போது அறிக்கை வெளியிட்டிருந்த அஜித், அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை” என்றார்.

-விளம்பரம்-
Advertisement