நான் இனி நடிக்க மாட்டேன் ! என் மனைவிக்கு பிடிக்கவில்லை ! காரணம் என்ன தெரியுமா ?

0
4429
Athu-ithu-yethu-ramar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சி என்ற பகுதி அனைவரையும் கவர்ந்தது. என்னதான் பல காமெடியன்கள் அதில் பங்கேற்றாலும் ஒருசிலர் மட்டுமே மக்கள் மனதை கவர்த்தனர்.

Ramar

அதில் மிகவும் கவர்ந்த ஒருவர் என்னமா இப்படி பண்றிங்களேமா இராமர். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்சசியை களாய்த்து செய்த காமெடி அனைவரையும் கவர்ந்தது. ஒரே எபிசோடில் பெண் வேடம் அணிந்து இவர் கூறிய ‘என்னமா இப்படி பண்றிங்கலேமா’ என்ற டயலாக் மிகவும் பிரபலமானது.

அடுத்தடுத்து இவர் பல பெண் வேடங்களில் வந்து அசத்தினார். இவர் தொலைக்காட்சியில் பெண் வேடமிட்டு காமெடி செய்த அதே கெட்டபில் சினிமாவிலும் கலக்கினர். ஆனால் தற்போது இனிமேல் தான் பெண் வேடமிட்டு நடிக்க போவது இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

Ramar-family

தான் நிறைய பெண் வேடமிட்டு காமெடி செய்து விட்டேன் எனவும், மேலும் தான் பெண் வேடமிட்டு நடிப்பதை தனது மனைவியும் குழைந்தைகளும் விரும்பவில்லை என்று கூறினார். ஆனால் திரைப்படங்களில் பெண் வேடமிட்டு நடிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டால் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். என்னமா ராமர் இப்படி பண்ணிட்டிங்கலேமா என்று ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.