அதுல்யா ரவியின் #10yearschallenge.!அப்போ எப்படி இருகாங்க பாருங்க.!

0
964
Actor Athula
- Advertisement -

கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற புதிய வகை ஹேஷ் டேக் படு வைரலாக பரவி வருகிறது. இதில் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை அதுல்யா ரவி தனது சவாலை மேற்கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. ’அழகென்ற சொல்லுக்கு அதுல்யா’ என்று இவரை புகழ சமூகவலைதளங்களில் பல ரசிகர் க்ளப்கள் கூட இருக்கின்றன.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த டீஸரில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

அந்த காட்சி குறித்து விளக்கமளித்த அதுல்யா,
டீஸரைப் பார்த்து அந்த கதாபாத்திரத்தைப் பற்றியும், திரைப்படம் பற்றியும் தீர்மானிக்காதீர்கள். கண்டிப்பாக படத்தில் நான் நேர்மறையான கதாபாத்திரமாகத்தான் இருப்பேன். சில எதிர்பாராத காட்சிகள் மூலம் சிலரை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

தற்போது நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அதுல்யா சமீபத்தில் #10yearschallenge-ஐ மேற்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement