தெரு பொறுக்கி நாய்ங்க.! பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்ட அதுல்யா.!

0
331

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை காண்டித்து பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் நடிகை அதுல்யா இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், இதுபோன்ற தெரு பொறுக்கி நாய்கள் செய்யும் விஷயத்தால் பலவேறு பசங்க பெயரும் கெட்டு விடுகிறது. இதுபோன்ற தவறு மற்ற நாட்டில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அதே தண்டனை இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.