பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பாக ஜீ சினி அவார்ட் விருதுகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில், சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள் என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை அதுல்யா கிளாமரான உடையில் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது. இப்படி கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்பும் கிடைத்தது. மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. `நாடோடிகள் 2′ தற்போது `அடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.
இதனால் இனி இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறினார் அதுல்யா. ஆனால் ,சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சிபி சத்யராஜுடன் வட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.