குடியரசு தின வாழ்த்துக்கு பதிலாக சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்த அதுல்யா ரவி. அத நீங்களே பாருங்க.

0
5560
athulya
- Advertisement -

இந்தியா முழுவதும் இன்று ஜனவரி 26ம் தேதியை முன்னிட்டு 71 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறார்கள். குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குடியரசு நாளை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் பிரபல நடிகையான அதுல்யா குடியரசு தின வாழ்த்துக்கு பதிலாக சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது. இப்படி கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்பும் கிடைத்தது. மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. `நாடோடிகள் 2′ தற்போது `அடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையும் பாருங்க : அந்த இரண்டு செகண்ட் காட்சிக்காக, 2 பிளைட் புடிச்சி, ஒரு நைட் புல்லா கண்ணு முழிச்சேன். நிவேதா தாமஸ் சொன்ன தகவல்.

- Advertisement -

காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை அதுல்யா இன்று குடியரசு தின வாழ்த்துக்கு பதிலாக சுதந்திர தின வாழ்த்தை குறியுள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவிட்ட அதுல்யா, அதில் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னது சுதந்திர தினமா என்று அதுல்யாவை கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து சுதந்திர தின வாழ்த்தை குடியரசு தின வாழ்த்து என்று மாற்றினார் அதுல்யா.இருப்பினும் அவர் சுதந்திர தினம் என்று பதிவிட்டிருந்த ஸ்க்ரீன் ஷாட் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement