தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அட்லீ. தற்போது இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவருடைய தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் படம் பேபி ஜான். இந்த படம் அட்லீயின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த தெறி படத்தினுடைய ரீமேக். இந்த படத்தை பாலிவுட்டில் அட்லீ தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா, ஜாக்கி ஷெராப் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் வருண் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தும் ஜானாக நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அப்போது பெண்களை கடத்தும் கும்பலுக்கும்
வருனுக்கும் இடையே பிரச்சனை நடக்கிறது. அப்போது தான் வருண் உடைய கடந்த கால வாழ்க்கை பற்றி தெரிய வருகிறது. அந்த கடந்த கால வாழ்க்கையில் வருணுக்கு நடந்தது என்ன? கடத்தல் கும்பலிடம் இருந்து அவர் பெண்களை மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
இந்த படம் முழுக்க முழுக்க தமிழில் வெளியாகியிருந்த தெறி படத்தினுடைய ரீமேக் தான். ஆனால், கதாபாத்திரத்திலும் காட்சிகளிலும் நிறைய மாற்றம் செய்திருக்கிறார்கள். இயக்குனர் சிறப்பாக கதைக்களத்தை கொண்டு சென்றிருக்கிறார். வருண் தவான் பேக்கரி வைத்து நடத்தும் ஜான் கதாபாத்திரத்திலும், dcp போலீஸ் ஆகவும் மிரட்டி இருக்கிறார். விஜயை ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவுதான்.
இருந்தாலும், தனக்கு கொடுத்த வேலையை வருண் கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். படத்தில்
இவருடைய மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார், இவரை தொடர்ந்து படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் வாமிகா கேபி நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தில் வைத்திருக்கும் டீவ்ஸ்ட் காட்சி எல்லாம் நன்றாக இருந்திருக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள்.
வில்லனாக ஜாக்கி ஷெராப் மிரட்டி இருக்கிறார். தமன் இசை ஓகே. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இறுதியாக கேமியோ ரோலில் சல்மான் கான் நடித்து இருக்கிறார். குறிப்பாக, படத்தினுடைய ஆக்ஷன் காட்சிகள் அரங்கத்தையே அதிர வைத்திருக்கிறது. மொத்தத்தில் ரீமேக் ஆக இருந்தாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.
நிறை:
நடிகர்களின் நடிப்பு சிறப்பு
திரைக்கதை ஓகே
இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதம் அருமையாக இருக்கிறது
எமோஷனல், ஆக்சன் காட்சிகள்
பாடல்கள் நன்றாக இருக்கிறது
ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது
குறை:
ரீமேக் கதை என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்கும் அளவிற்கு இருக்கிறது
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் பேபி ஜான்- முயற்சி