அட்லீ இல்லன்னா விஜய் இல்ல – ட்வீட் செய்த சினிமா பையனுக்கு அட்லீ கொடுத்த பதிலடி.

0
43326
abishek

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். சில தினங்களுக்கு முன்பு தான் தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கொரானாவின் ஆட்டம் தலைவிரித்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட முடியாமல் போனது. இருந்தாலும் ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் புதிய புதிய போஸ்டர்களை உருவாக்கி தளபதி விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள். இதற்கு இடையில் விஜய்யின் 27 வருட சினிமா வாழ்க்கை பயணத்தின் வளர்ச்சி குறித்தும் பல பதிவுகள் வந்து கொண்டிருந்தது.

27 வருட உழைப்புக்குப் பிறகு தற்போது விஜய் அவர்கள் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் இந்த வளர்சிக்கு காரணமானவர்களுள் அட்லீயும் ஒருவர் ஒன்று சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்து உள்ளது. கடந்த நான்கு வருடங்களாக விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த அந்த மூன்று படங்கள் மட்டும் விஜயின் வளர்ச்சிக்கு காரணம் என்று இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த மூன்று படங்களும் சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் விஜய்யின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படமாக கருதப்படுகிறது. விஜய் இதற்கு முன்னாடி நிறைய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மத்தியில் கவர வைத்தது தெறி படத்தின் மூலம் தான். பிறகு மெர்சல் படத்தில் விஜய் முதன் முறையாக மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் சினிமா உலகில் இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு அட்லி தான் காரணம் என்று ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

தற்போது இந்த கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இப்படி ரசிகர்கள் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வந்ததை பார்த்த படம் ரெவியூர் அபிஷேக் அபிஷேக் ராஜா அவர்கள் டுவிட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நீங்க என்னதான் கதறினாலும் மாறி மாறி சண்டை போட்டாலும் தளபதி விஜயின் வெற்றிக்கு அட்லி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் என்று கூறி இருந்தார். இதை பார்த்தும் பலர் தாறுமாறாக திட்டி வருகிறார்கள். மேலும், அட்லீ அவர்கள் விஜய்யின் பிறந்த நாளுக்கு டீவ்ட் போட்டிருந்தார். அதில், நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட அண்ணா என்னோட தளபதி. என்னை விட அவர் தான் என்னை மிகவும் நேசிக்கிறார். ஐ லவ் யூ அண்ணா என்று குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement