“உயர்ந்த மனிதன்” ஆக தமிழுக்கு வரும் அமிதாப் பச்சன்..! எஸ் ஜெ சூர்யாவை பாராட்டிய அட்லீ..!

0
78
Amithab-Bachan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அஸ்தி வருபவர் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ் ஜெ சூர்யா. தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த இவர் தற்போது இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் கை கோர்க்கவிருக்கிறார்.

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “கள்வனின் காதலி” படத்தை இயக்கிய தமிழ் வாணன் என்பவர் தற்போது இந்தி நடிகர் அமிதாப் பச்சனை வைத்து “உயர்ந்த மனிதன் “என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

- Advertisement -

இப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படம் மூலம் இந்தியில் முதன் முறையாக நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதே போல அமிதாப் பச்சனுக்கும் இது முதல் தமிழ் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எஸ் ஜெ சூர்யா வெளியிட்டிருந்தார்.

sj surya

சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய நடிகர் எஸ் ஜெ சூர்யா பேசும்போது, ‘படத்தை அடுத்த படிக்கு எடுத்துச் சென்ற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும். அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவ்வளவு பிசியாக இருக்கின்ற மனிதனின் கால்ஷீட் கிடைக்க மிகவும் சவாலாக இருந்தது. இப்படி இருக்க `உயர்ந்த மனிதன்’ படத்துக்கு அவர் கொடுத்த கால்சீட் 40 நாள்கள் ’ எனக் கூறினார்.

Advertisement